Press "Enter" to skip to content

உற்சாகப்படுத்துவார்… சிரிக்க வைப்பார்… தங்கதுரை நெகிழ்ச்சி

தமிழ் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் தங்கதுரை, சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறியிருக்கிறார்.

பழைய ஜோக் தங்கதுரை என்ற அடைமொழி கொண்ட தங்கதுரை, தற்போது தமிழ் திரைப்படத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். ‘ஏ ஓன்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜாக்பாட்’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ உட்பட ஏராளமான படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இப்படம் குறித்து தங்கதுரை கூறும்போது, ‘‘சார்பட்டா பரம்பரை’ எனக்கு திருப்பு முனை கொடுத்த படம்னு சொல்லலாம். ஏற்கனவே பல படங்கள் பண்ணியிருந்தாலும் இந்தப் படம் என்னை உலகம் முழுக்க உள்ள தமிழர்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளது. இந்த பெருமை எல்லாம் பா.ரஞ்சித்தையே சேரும்.

பா.ரஞ்சித் சார் ரொம்ப பொறுமைசாலி. எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் நடிகர், நடிகைகளிடம் பதற்றம் இல்லாமல் கூலாக வேலை வாங்குவார். ‘கபாலி’ டைம்ல பா.ரஞ்சித்தை சந்தித்து வாய்ப்பு கேட்டேன். ‘சார்பட்டா’வில் ஞாபகம் வைத்து வாய்ப்பு கொடுத்தார். முக்கியத்துவம் உள்ள வர்ணனையாளர் கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்தார். ‘டேக்’ சிறப்பாக பண்ணும்போது யூனிட்ல உள்ளவங்களை கைதட்டச் சொல்லி உற்சாகப்படுத்துவார். சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டேயிருப்பேன். ‘ஷாட் எப்போதோ முடிந்துவிட்டது. போய் ரெஸ்ட் எடுத்துக்கோ’னு சிரிக்க வைப்பார். ஆர்யா, பசுபதி ஜி.எம்.சுந்தர், கலையரசன், காளிவெங்கட், ஜான்விஜய் உட்பட மொத்த டீமும் மகிழ்ச்சியாக பழகினார்கள். படம் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. 

தங்கதுரை – பா.ரஞ்சித்

விரைவில் வெளிவரவுள்ள யோகிபாபுவின் ‘பன்னிகுட்டி’, சி.வி.குமார் தயாரிப்பில் மனோ கார்த்திக் இயக்கும் ‘ஜாங்கோ’, ரியோவின் ‘ப்ளான் பண்ணி பண்ணனும்’, மதிமாறன் இயக்கும் ‘செல்பி, ஆதியின் ‘பார்ட்னர்’, சிம்பு, ஹன்சிகாவின் ‘மஹா’ போன்ற படங்களில் வெரைட்டியான தங்கதுரையை பார்க்கலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா- பாண்டிராஜ் இணைந்திருக்கும்‘ எதற்கும் துணிந்தவன்’, கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படம், சிபிராஜ் நடிக்கும் படம், ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், சன்னிலியோன் நடிக்கும் படம் உட்பட ஏராளமான படங்கள் கைவசம் இருக்கிறது’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »