Press "Enter" to skip to content

சிக்ஸர் பட இயக்குனர் திருமணம் – நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்

வைபவ் நடிப்பில் வெளியான சிக்ஸர் என்ற படத்தை இயக்குனர் சாச்சிக்கும், மருத்துவர் சரண்யாவிற்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

வைபவ் நடித்த சிக்ஸர் படத்தை இயக்கியவர் சாச்சி. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் சரண்யா என்ற பெண்ணுக்கும் இன்று (1.9.2021) புதன் கிழமை காலை கோவிலம்பாக்கதில் உள்ள விஜயராஜா திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

இயக்குனர் சாச்சி நகைச்சுவை நடிகர் சதீஷின் மச்சான் ஆவார். சாச்சியின் திருமணத்திற்கு திரைப்படம் பிரபலங்கள் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், மிர்ச்சிசிவா, இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, அஜய் (நடன இயக்குனர்), நிப்பு சாமி, நடிகை ரித்திவிகா, வெண்பா, கிருத்திகா, அமுதவணன், ஆகாஷ், தினேஷ் கண்ணன், ஜோமின், தீனா, பாலா, அசார், தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »