Press "Enter" to skip to content

‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் புதிய வெளியீடு தேதி அறிவிப்பு

ராஜமவுலி இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (ஆர்.ஆர்.ஆர்). பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. 

டிவிவி தனய்யா தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் விளம்பர ஒட்டி

இப்படத்தை அக்டோபர் 13-ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தின் பணிகள் தாமதமானதால், தற்போது வெளியீடு தேதியை மாற்றி உள்ளனர். தற்போது புதிய வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »