Press "Enter" to skip to content

மாயோன் படக்குழுவினரின் வித்தியாசமான முயற்சி

சிபிராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் மாயோன் படத்தின் குழுவினர், சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வித்தியாசமான முயற்சியை செய்திருக்கிறார்கள்.

சர்வதேச மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிபிராஜ் நடிப்பில் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘மாயோன்’ படத்தின் விளம்பரம், மாற்று திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது, அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

இது தொடர்பாக பட தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ”மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்!. நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக ‘மாயோன்’ படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேக ஒலி குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம் என பதிவிட்டிருக்கிறார்.

மாயோன் படத்தில் சிபிராஜ் – தன்யா

‘மாயோன்’ படத்தில் நடிகர் சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் ராதாரவி, கே.எஸ்.ரவிக்குமார், பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, அறிமுக இயக்குநர் என்.கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்தப் படத்திற்கு ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீச்சருக்காக பிரத்யேக ஒலிக்குறிப்பை சர்வதேச அளவில் புகழ்பெற்ற மாற்றுதிறனாளி கலைஞரான ‘இன்ஸ்பயரிங்’ இளங்கோ மேற்கொண்டிருக்கிறார்.

இதனிடையே மாற்றுத்திறனாளிகளும் பலனடையும் வகையிலான பிரத்யேக ஒலிக்குறிப்புடன் படத்தின் விளம்பரம் வெளியிடும் பணியினை, தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் இதற்கு முன்னர் வெளியான ‘சைக்கோ’ படத்திலும் கையாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »