Press "Enter" to skip to content

ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

பல படங்களில் வேலையாக நடித்து வரும் விஜய் சேதுபதி, சீனியர் கலைஞன் ஜனகராஜிற்காக ஒரு படத்தில் நடித்து கொடுத்து இருக்கிறார்.

ஜே.பி.ஜே.பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் “ஒபாமா”. இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி.சிவா, தளபதி தினேஷ், கோதண்டம், கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

இப்படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது, இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சமூகம் சார்ந்த கருத்துக்களை காதல், நகைச்சுவை கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க உறுதி அளித்து இருந்தார், ஆனால் அவர் படப்பிடிப்பு நேரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் நான் ரொம்பவும் வருத்தம் ஆகிவிட்டேன் அதை பார்த்த நடிகர் ஜனகராஜ், என்னிடம் வந்து இரு குட்டி நான் ஒரு முயற்சி செய்கிறேன் என்றார். பின் அவர் 96 படத்தின் டைரக்டர் பிரேம் அவர்களிடம் இந்த மாதிரியான படம் விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பாரா என்று கேட்க, அவரும் உங்களுக்காக கேட்டு பார்க்கறேன் என்றார். அதை கேட்டு அவரும் அண்ணனுக்காக நடித்து கொடுக்கலாம் என்று சொல்லிவிட்டார். இதை அவர் சொன்ன போது என்னால் நம்ப முடியவில்லை. அவரை கேட்டால் நடிப்பார் என்று எப்படி தோன்றியது என்று ஜனகராஜிடம் கேட்டேன்? அதற்கு ஜனகராஜ் அவரோடு பழகிய போது தெரிந்தது என்றார். அது சீனியர் ஒருவருக்கான மரியாதை, தொழிலுக்கு காட்டும் நன்றி தான் அதற்கு காரணம் என்றார்.

ஜனகராஜ் – பிரித்வி பாண்டியராஜ்

உடனே நான் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை நேரில் சந்தித்து டிஸ்கஷன் செய்தேன், பிறகு நடித்து கொடுத்தார். மிகவும் சந்தோஷமாக இருந்தது. நான் ஆண்பாவம் படம் முதல் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறேன். பலரையும் கண்டு இருக்கிறேன். ஆனால் மக்கள் செல்வன் பட்டத்திற்கு ஏற்ற மனிதர் தான் விஜய் சேதுபதி’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »