Press "Enter" to skip to content

அடுத்த கட்டத்திற்கு செல்லும் கோப்ரா

விறுவிறுப்பாக நடந்த கோப்ரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை விக்ரமுடன் சேர்ந்து படக்குழுவினர்இனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடியுள்ளனர்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை கொடுத்த அஜய் ஞானமுத்து, அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’. விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து வந்த சமயத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததால், படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு படக்குழு நாடு திரும்பியது. இதன் பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. 

கோப்ரா படக்குழு

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுடைந்துள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விக்ரமுடன் சேர்ந்து படக்குழுஇனிப்புக்கட்டி (கேக்) வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »