Press "Enter" to skip to content

பாடகி லதா மங்கேஷ்கர் பூரண குணமடைந்தார்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த பாடகி லதா மங்கேஷ்கர் பூரண குணமடைந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில்  திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

லதா மங்கேஷ்கர்

தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் அவரது உடல் நிலையை தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில். அவரது உடல் முன்னேற்றம் அடைந்து அவர் பூரணமாக குணமைடைந்துள்ளார். இந்த செய்தியை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

லதா மங்கேஷ்கர், தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பிரான்சின் உயரிய விருது, உள்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார்.  1948 முதல் 1974 க்கு இடையில் 25,000 பாடல்களுக்கு மேல் அவர் பாடியுள்ளார். கடந்த 2001 ஆம்  இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது லதா மங்கேஷ்கருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »