Press "Enter" to skip to content

இளையராஜாவின் 1417வது படம்.. வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா

இளையராஜா இசையமைக்கும் 1417-வது படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.

இந்திய திரைப்படத்தின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் இசையமைக்கும் 1417-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இயக்குகிறார். பிரஜன் கதாநாயகனாக நடிக்க மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சினாமிகா, மனோபாலா, முத்துராமன், மதுமிதா, மக்கள் விரும்பத்தக்கது, ரோகித், ஆருத்ரா போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா

இப்படம் அழகி, ஆட்டோகிராப், 96 படங்களை போன்று பள்ளிப்பருவ காதலை சொல்ல இருக்கிறது. ”நினைவெல்லாம் நீயடா” என்று பெயர் வைத்திருக்கும் இப்படத்தின் முதல் பார்வை விளம்பர ஒட்டியை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். இப்படம் வருகிற மே மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »