Press "Enter" to skip to content

ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும்.. வைரமுத்து பதிவு

இரண்டாவது நாளாக ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதை குறித்து வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டாவது நாளாக ரஷிய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கிவ்வை குறிவைத்து தாக்கும் ரஷ்ய படைகள் கிவ் மீது 36 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ரஷ்ய படைகள் ஏவி தாக்கியதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை 4.20 மணிக்கு கிவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டது.

உக்ரைனின் கேர்சன் என்ற பகுதியை கைப்பற்றிய ரஷிய ராணுவம் கேர்சன் பகுதியில் உள்ள அரசு கட்டடத்தில் ரஷிய தேசிய கொடியை ஏற்றினர். முதல்நாள் போரில் ரஷியாவின் 800 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் என் மீது குறிவைத்து உக்ரைன் தலைநகரில் நுழைந்துள்ளது எனவும், என்னை அழித்தால் உக்ரைனை அழித்து விடலாம் என ரஷ்யா நினைக்கிறது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

வைரமுத்து

இந்தநிலையில் இந்த போர் குறித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நான் போரை வெறுக்கிறேன். அது உலகத்தின் விலா எலும்புகளையும் பாதிக்கும். கீவ் நகரத்தில் விழுந்த குண்டு கீரிப்பட்டியின் கீரைக்காரி கூடை உடைக்கும். ரஷ்யா போரை நிறுத்திவிட வேண்டும். ரஷ்யா மீது ஜி7 நாடுகளின் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். நான் போரை வெறுக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இவரின் பதிவு மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »