Press "Enter" to skip to content

”தல உனக்கு மட்டும் தான் இப்படி கூட்டம் வருது” – நெகிழ்ந்த குஷ்பு

வலிமை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அப்படம் குறித்து நடிகை குஷ்பு புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

அஜித், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் ரிலீசையொட்டி ரசிகர்கள் திரையரங்கம்களில் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் நடனம் ஆடியும் கட்-அவுட் வைத்தும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடினர். இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலர் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குஷ்பு

இந்நிலையில் வலிமை படத்தை பார்த்த நடிகை குஷ்பூ படத்தையும் அஜித்தையும் பாராட்டியுள்ளார். இதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “தல உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Related Tags :

[embedded content]

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »