Press "Enter" to skip to content

பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள்……

ரஷ்ய தாக்குதலால் அச்சமடைந்த உக்ரைன் மக்கள், பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே  கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் போர் நடந்து வருகிறது.  இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  ரஷ்யா போர் நிறுத்ததை இதுவரை அறிவிக்காத நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  ரஷ்யா தொடர்ந்து அதனுடைய பலத்தை நிரூபித்து வரும் நிலையில் உலக நாடுகள் பலவும் உக்ரைனுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகின்றன.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 11 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து வீடுகளிலிருந்து வெளியேறிய மக்கள், பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையங்கள், சுரங்கப் பாதைகள் உள்ளிட்ட இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.  கீவ் நகரில் உள்ள பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையங்களில் பொதுமக்கள் குவிந்துள்ளதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:    வயலில் விழுந்து நொறுங்கிய விமானம்…. சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு….

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »