Press "Enter" to skip to content

கணவனை விட்டுவிட்டு…கடத்திய பெற்றோரிடமே செல்ல விருப்பம் தெரிவித்தார் கிருத்திகா பட்டேல்…!

ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பெற்று திமுக தோழமைக் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெறும் எனக் கூறியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.

ஒப்பந்த பணிகள்:

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை கல்யாணபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வருகிற குடியிருப்பு பகுதிகளை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் செயலாளர் அபூர்வா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.  

தொடர்ந்து மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தினார் அமைச்சர் சேகர் பாபு.  அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் 9 மாடி கொன்ட 288 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு 46,14,00,000 ரூபாய் செலவில் 18 மாதம் ஒப்பந்த அடிப்படையில் கட்டப்பட்டு வருகிறது

சேதமடைந்த கட்டிடங்கள்:

கல்யாணபுரம் பகுதியில் ஏற்கனவே இருந்த குடியிருப்பு பகுதிகள் மிகவும் சேதம் அடைந்ததால் அவற்றை புதிதாக கட்டுவதற்காக சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டு 2019 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள்  துவக்கப்பட்டது.

பணியில் தேக்கம்:

அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டு முடிக்கப்பட வேண்டிய இந்த பணிகள் இயற்கை பேரிடரான கொரோனா மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் விரைவில் முடிக்கப்பட இயலாத சூழல் உருவானது.

விரைவில் பயன்பாட்டிற்கு:

ஆகவே விரைவில் இந்த பணிகளை முடித்து மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

கட்டிட பணிகளை விரைவில் முடிக்காத ஒப்பந்ததாரர்களை கருப்பு பட்டியலுக்கு மாற்றி விடுவேன் என்றும் கடிந்து கொண்டார் அமைச்சர் சேகர்பாபு. 

சிறப்பம்சங்கள்:

மேலும் வாரத்திற்கு ஒருமுறை ஒப்பந்ததாரரிடம் பணிகளை முடிக்க அறிவுறுத்தி வந்தோம் என்றும் புதிதாக இந்த குடியிருப்பு பகுதிகளில் அங்கன்வாடி, நூலகம், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க நகர் புற வளர்ச்சி துறையின் செயலாளர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார் என்றும் அந்த பணிகளுக்கு சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து வழங்குவதற்காக உத்தரவிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தரமற்ற கட்டிடங்களா:

கட்டுமான பணிகளில் எந்தவிதமான சமரசமும் நாங்கள் வைத்துக் கொள்வதில்லை
எனவும் ஆகவே தரமான வகையில் தான் இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் இதில் தரத்திற்கு சந்தேகம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் சேகர் பாபு.

திராவிட மாடல்:

மேலும் அனைவரும் சமம் அதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றும் ஒரு சில இடங்களில் பட்டியல் இன  பொதுமக்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை என்று அறிந்து அந்தந்த மாவட்ட சேர்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி அவற்றை சரி செய்து வருகிறோம் எனவும் பதிலளித்தார்.

வெற்றி நிச்சயம்:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு கேட்டு சென்ற பொழுது எந்த இடத்திலும் திமுக அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கவில்லை எனவும் நிச்சயமாக 75% மேலாக வாக்குகள் பெற்று திமுக தோழமைக் கட்சியான கை சின்னம் வெற்றி பெறும் என்று நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார் சேகர் பாபு.

இதையும் படிக்க:    சிறந்த அரசு மருத்துவமனை: முதலிடத்தில் ராஜீவ் காந்தி மருந்துவமனை!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »