Press "Enter" to skip to content

தோல்வியை ஒத்துக்கொண்ட காங்கிரஸ் … சர்வதிகார ஆட்சிக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு!!

பாஜகவிற்கு எதிராக விழும் வாக்குகள் பிளவுபடாமல் தடுக்க எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே மிக அவசியமான ஒன்றாகும்.  மோடி அரசை காங்கிரஸால் மட்டுமே தோற்கடிக்க முடியாது.

காங்கிரஸின் தோல்வி:

2024 பொதுத் தேர்தலில் மோடி அரசை தனித்து எதிர்கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் கடினம் என்பதை காங்கிரஸ் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.  பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸால் மட்டும் இந்த அரசை எதிர்த்துப் போராட முடியாது என்று கூறியுள்ளார். 

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை:

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே பாஜக அரசின் வெற்றியை சிதைப்பதற்கான முடிவாகும்.  மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து காங்கிரசும் கவலை கொள்கிறது எனவும் இந்த அரசை காங்கிரஸால் தனித்து எதிர்கொள்ள முடியாது என ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன் கார்கேவும் பலமுறை கூறியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும், காங்கிரஸ் எந்த நிலையிலும் போராடும் எனக் கூறிய அவர் தற்போது எதிர்கட்சிகளின் ஒற்றுமையே மிக அவசியமான ஒன்று எனக் கூறியுள்ளார்.. 

சர்வாதிகார அரசு:

வேணுகோபால் மேலும் கூறுகையில், “நாட்டின் தற்போதைய நிலை அனைவருக்கும் தெரியும். தற்போதைய அரசு முழுமையான சர்வாதிகாரத்தில் இறங்கியுள்ளது.  நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போன்ற சூழலே நிலவுகிறது.

 இந்த சர்வாதிகார அரசை எதிர்த்துப் போராடுவது எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பாக காங்கிரசுக்கு பெரிய பணியாகும்.” எனக் கூறியுள்ளார்.

இளைஞர்களே இலக்கு:

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த சிந்தன் ஷிவிரின் போது காங்கிரஸின் 50 கீழ் 50 என்ற கொள்கை குறித்து பேசிய வேணுகோபால், “கட்சியின் நிர்வாகிகளில் 50 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று நாங்கள் மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம். அதை அடுத்த மாதம் 15க்குள் செய்வோம்.  கட்சியின் 50 சதவீத நிர்வாகிகள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.” எனத் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  அடி மேல் அடி வாங்கும் உத்தவ் தாக்கரே…. உச்சநீதிமன்றத்திலும் அவமதிப்பு?!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »