Press "Enter" to skip to content

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் வார்டில் புகுந்த நல்ல பாம்பால் பரபரப்பு..!

தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனரி கிராமத்தில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், புனித நீர் கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து, கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்ட நிலையில் பக்தர்கள் பார்வை செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அஞ்சுகோட்டை பகுதியில் உள்ள பழமை வாய்ந்த அழகிய நாயகி அம்மன் –  ஆனிமுத்து கருப்பர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், மகா குடமுழுக்கு நடைபெற்றது.  கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்து வைத்த காட்சியை கண்டு மக்கள் பரவசமடைந்தனர். 

இதையும் படிக்க : ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் தீர்மானத்தை யாராலும் ரத்து செய்ய முடியாது – ஓபிஎஸ்!

இதேபோன்று, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காரியசித்தி விநாயகர், அய்யனார் மற்றும் காருண்யேஸ்வரர் கோயில் ஆகிய 3 கோயில்களில் மகா குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி பார்வை செய்தனர். 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுமருதூரில் பகவதி காளியம்மன், ஒல்லி வெட்டி கருப்பண்ண சாமி, சக்ர விநாயகர், ஆஞ்சநேயர் கோயில்கள் புனரமைக்கப்பட்ட நிலையில்,  குடமுழுக்கு விழா நடைபெற்றது. பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை ஊற்றி குடமுழுக்கு செய்தனர்.  

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »