Press "Enter" to skip to content

புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் பார்த்திபன்…

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை நடிகர் பார்த்திபன் பார்வையிட்டார்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் புகைப்பட கண்காட்சியை நடிகர் பார்த்திபன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சர் படிப்படியாக தான் இந்த பதவிக்கு வந்திருக்கிறார் என்றும், ஒவ்வொரு படிகளும் மோசமான படிகள் அதனை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், தனியார் அமைப்பு நடத்திய போலி கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மருத்துவர் பட்டம் எல்லாம் வேணடாம், கம்பவுண்டர் பட்டம் கொடுத்தால் போதும் என்று நகைச்சுவையாக கூறினார்.

மேலும் படிக்க | இந்தியாவில் உருவாகும் ஒரு ஜானி தெப்… உண்மையில் யார் இங்கு தவறு?

அண்மையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், தனியார் அமைப்பு ஒன்று, கௌரவ மருத்துவர் பட்டம் வழங்குவதாக கூறி பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி நடத்தியது.இது பெரும் சர்சையை ஏற்படுத்தியது இதில் நடிகர் பார்த்திப்பனும் கலந்துகொண்டார். இதுகுறித்து விளக்கமளித்தவர்,  இதற்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் மருத்துவர் பட்டம் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளனர்.

இதனால் நான் இதுபோன்ற போலியான ஆட்களை நம்புவதில்லை, அந்த நிகழ்ச்சியில் எனக்கு மருத்துவர் பட்டம் வழங்கப்படவில்லை.

அப்துல்கலாம் விருது தான் வழங்கப்பட்டது. இதுவரை 30 மேற்பட்டவர்கள் மருத்துவர் பட்டம் தருவதாக கூறியுள்ளனர். நான் மருத்துவர் பட்டம் பெரும் அளவிற்கு எல்லாம் இல்லை ஒரு கம்பவுண்டர் பட்டம் கொடுத்தால் போதும் என்பேன் என் நகைச்சுவையாக பேசி முடித்தார்.

— பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | காதலரால் தாக்கப்பட்ட நடிகை அனிக்கா….!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »