Press "Enter" to skip to content

தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்கிறதா மத்திய அரசு…!!!

144 தடையை மீறி நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை எதிர்கட்சியினர் பேரணியாக சென்றனர்.

வலியுறுத்தல்:

பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடு விவகாரத்தில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்ட நிகழ்வு நாடுமுழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.  இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

144 தடை:

ஆனால், மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காததை நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை எதிர்கட்சி உறுப்பினர்கள் பேரணியாக செல்ல முயன்றனர்.  இதனை தடுக்கும் வகையில் அந்த பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டது. எனினும், தடையை மீறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.  அப்போது, காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது. 

காங்கிரஸ் தலைவர்:

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காவலர்களை கொண்டு தங்களது பேரணியை மத்திய அரசு தடுப்பதாக கூறினார்.  மேலும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் மத்திய அரசு ஜனநாயகம் குறித்து பேசுவதாக எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

ராகுல் கேள்வி:

இதனிடையே, ராணுவ தளவாடங்கள் வாங்க அதானி மற்றும் எலாரா நிறுவனங்களுக்கு மத்திய அரசு எதன் அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கியது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வினவி உள்ளார்.

 மேலும், தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசம் செய்து கொள்கிறதா என கேள்வி எழுப்பி உள்ள அவர், அறியப்படாத வெளிநாட்டு நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கியது ஏன் என்றும் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிக்க:    லஞ்ச ஒழிப்பு சோதனை…. அலுவலகத்தை பூட்டிய அதிகாரிகள்… கைப்பற்றப்பட்ட பெரிய தொகை!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »