Press "Enter" to skip to content

உண்மையான சிங்கங்களாகவும், சாமிகளாகவும் நம் காவல் துறையினர் …. உதயநிதி ஸ்டாலின்!!

ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கமலாலயத்தில்:

சென்னை, தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்திக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.  அப்போது பாஜக அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர்.  இதனையடுத்து அங்கு விரைந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்  கட்சியினரை கைது செய்தனர்.

திருவள்ளூரில்:

இதேப்போன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில்,  மாநில இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் நரேந்திர தேவ், காங்கிரஸ் நகர செயலாளர் அமித் பாபு தலைமையில், சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும்  ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து அங்கு விரைந்த காவல் துறையினர் அனைவரையும் அப்புறப்படுத்தினர்,.

தாம்பரத்தில்:

இதேப்போல்,  தாம்பரம் பேருந்து நிலையம் ஜிஎஸ்டி சாலையில், நாங்கேரி சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட தலைவர் செந்தில் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  அப்போது சாலை மறியலில் ஈடுப்பட்ட நபர்களை குண்டு கட்டாக காவல் துறையினர் தூக்கிச் சென்றனர்.  இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூரில்:

இதனைதொடர்ந்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பாஜக அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி, கையில் மெழுகுவர்த்தியுடன் காந்தி சிலையின் அடியில் அமர்ந்து பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிக்க:    “தமிழ் புத்தாண்டு அன்று தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி இருக்கும்….” அண்ணாமலை கூற காரணம் என்ன?!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »