Press "Enter" to skip to content

கோவையில் அசால்டாக கலக்கும் முதல் லேடி பஸ் டிரைவர்…

சென்னையின் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து வந்த மக்களுக்கு பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) போக்குவரத்து சேவை வரப்பிரசாதமாக அமைந்தது.

வேலைகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமின்றி மாணவர்களும் மற்றும் பலதரப்பட்டவர்களும் பயன்படுத்தும் இந்த போக்குவரத்து சேவையானது குறைந்த பணத்தில், குளு குளுவென நெடு தூரம் பயணிக்க உதவியாக இருக்கிறது.

போக்குவரத்து நெரிசல் இல்லை….,வியர்க்க விறுவிறுக்க களைப்பான பயணம் இல்லை. குறைந்த நேரத்தில், குறித்த நேரத்தில் பயணம். இதுதான் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) சேவை… இதனாலேயே மெட்ரோ தொடர் வண்டியில் பயணிக்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

மேலும் படிக்க | இந்தியாவில் உருவாகும் ஒரு ஜானி தெப்… உண்மையில் யார் இங்கு தவறு?

பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) மட்டுமல்ல, பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) சுரங்கப்பாதை மற்றும் பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) மேம்பாலம் என அனைத்தும் நம்மை வியந்து பார்க்க வைக்கும் வியப்பாகவே உள்ளது. இப்படி நாம் பார்த்து வியக்கும் மெட்ரோ ரயிலை பெண்கள் ஓட்டி வரும் காட்சி, நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்துகிறது. 

கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து செல்லும் மெட்ரோவின் வேகம், நடைபாதையில் நின்று கொண்டிருக்கும் நம்மையே கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கிறது. 

ஆனால் இந்த ரயிலை இளம் பெண்கள் ஓட்டி வருவதை பார்க்கும் போது, உண்மையில் பாரதி கண்ட புதுமைப் பெண்களை நேரில் சந்தித்த மகிழ்ச்சி நம்மை தொற்றிக் கொள்கிறது. எந்த வித அச்சமும் இன்றி, பெண்கள் மெட்ரோ ரயிலை ஓட்டிச் சென்று, பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டு, மிடுக்காக நடந்து வரும் அழகே தனிதான். 

மெட்ரோ ரயிலை ஓட்டும் போது உங்களுக்கு பயமாக இருக்காதா என்ற கேள்விக்கு “பயமா, அதெல்லாம் பயிற்சியின் போதே தெளிந்து விடும்” என்று அசால்டாக சொல்கின்றனர் இந்த வீரத் தமிழச்சிகள்.

மேலும் படிக்க | பாஜக நிர்வாகிகள் மேலும் 4 பேர் அதிமுகவில் இணைவு…அண்ணாமலை அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பல்வேறு துறையிலும் பெண்கள் சாதனைப் படைத்து வரும் நிலையில், நாள்தோறும் மக்களுடன் தொடர்பில் இருக்கும் இந்த பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) ஓட்டுனர்கள், பொதுமக்களுடன் மிகவும் பரிச்சையமாகி விடுகின்றனர். 

குழந்தைகளுக்கு இவர்களை காண்பித்து, நீயும் வளர்ந்து, இவர்கள் போல் தைரியமாக சாதிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கூறும் அளவிற்கு இவர்கள் கதாபாத்திரம் மாடலாக மாறிவிட்டனர். 

பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிர்வாகத்தில் அனுமதிச்சீட்டு கவுண்டர், பாதுகாப்பு பணி, பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் Inquiry, துப்புரவு பணி என அனைத்து பணியில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) ஓட்டும் பணியில் மட்டும் வெறும் 10 பெண்கள் மட்டுமே உள்ளதாக கூறுகின்றனர். 

மேலும் படிக்க | அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்…பாஜக – அதிமுக கூட்டணி உடைகிறதா…?

எனவே பெண்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டு,  தங்களை கதாபாத்திரம் மாடலாக வைத்து, பெண்கள் பலரும் இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். 

ஏதோ வேலைக்கு சென்றோம், சம்பாரித்தோம் என்று இல்லாமல், நாம் எந்த துறையில் இருந்தாலும் மற்றவர்கள் நம்மை திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பான ஒரு தடத்தில் கால் பதித்து, அடுத்த தலைமுறை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும். 

இதுவே பெண்களின் முன்னேற்றத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய தூண்டுகோல் எனலாம். அந்தவகையில், இந்த வீர மங்கைகள், ஒரு புதிய தடத்தில், கால் பதித்து, பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்றால் அது மிகையில்லை.  

மாலை முரசு செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் ஜெகதீஷூடன் செலினா…

மேலும் படிக்க | லண்டனில் ராகுல்… இந்தியாவை அவதூறு செய்பவர் இந்தியப் பிரதமரே…!!!

 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »