Press "Enter" to skip to content

தலைமைக்காவலர் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை…

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை கலாஷேத்ராவில் விடிய விடிய போராட்டம் நடைபெற்ற நிலையில், சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தலைவர் குமாரி விசாரணை நடத்தினார்.

திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவின் கீழ் செயல்படும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் நடனம் உள்ளிட்ட கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. இந்நிலையில் இங்கு பயிலும் மாணவிகளுக்கு 4 பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான நடவடிக்கைக்கு உத்தரவிட்டிருந்த தேசிய மகளிர் ஆணையம், பொய் குற்றச்சாட்டு எனக்கூறி அறிக்கையை திரும்பப் பெற்றது.

இதையும் படிக்க : வேல்முருகனின் கேள்விக்கு கடுப்படைந்த அமைச்சர் எம்.ஆர்.கே….!

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் உரிய நடவடிக்கை கோரி கலாஷேத்ராவில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில், மாணவிகள் கலைந்து சென்றனர். பின்னர் போராடிய மாணவிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.

இந்நிலையில் விடிய விடிய போராட்டம் நடைபெற்றதை அடுத்து, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்தது. சம்பவம் தொடர்பாக மத்திய அரசிற்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மாணவிகள் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து புகார் குறித்து, தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி மாணவிகளிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »