Press "Enter" to skip to content

காவேரி குண்டாறு திட்டம் நிச்சயம் கட்டிக் முடிக்கப்படும்…துரைமுருகன் உறுதி!

தமிழ்நாடு முழுவதும் சீரான வார்டு மறுவரை செய்ய குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நான்காவது நாளாக, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற வினாக்கள் விடைகள் நேரத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டுகளை மறுவரை செய்ய வேண்டுமென அத்தொகுதியின் எம்எல்ஏ ஈஸ்வரன் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த கே.என்.நேரு, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வார்டு மறுவரை செய்ய முதலமைச்சரிடம் அனுமதி பெற்று குழு அமைத்து 2 ஆண்டுகளுக்குள் பணி முடிக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிக்க : முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க உத்தரவு… 

!

தொடர்ந்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா என்ற சேவூர் ராமச்சந்திரன் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், 8 புதிய மாவட்டங்களை உருவாக்குவது குறித்து  தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளதாக குறிப்பிட்டார். 

தொடர்ந்து பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரனுக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, பெரம்பலூரில் 90 கோடி ரூபாய் செலவில் காவேரி கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எனக் கூறினார். கோவை மற்றும் சிங்காநல்லூரில் நிலவி வரும் குடிநீர் பஞ்சத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »