Press "Enter" to skip to content

சென்னை எல்லைச் சாலை திட்டம்…!!!

தருமபுரி மாவட்டம் சிவாடி ஊராட்சியில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் தகாத செயலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நல்லம்பள்ளி அடுத்த சிவாடி கிராமத்தில் உள்ள ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து செட்டியூர் உள்ளிட்ட 4 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய இளைஞர்கள் சிலர், கஞ்சா மற்றும் மது அருந்தி உள்ளனர்.  மேலும், தொட்டியில் அவர்கள் தகாத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் இதை குறித்து தட்டிக்கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இதனையடுத்து, தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டது. 

இதுகுறித்த புகாரின் பேரில் தொப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதே இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காரணம் என கவலை தெரிவிக்கும் பொதுமக்கள், இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

இதையும் படிக்க:   

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
malaimurasu.com/The-incident-is-reprehensible” target=”_blank” rel=”noopener”>சம்பவம் கண்டிக்கத்தக்கது…விரைவில் உரிய நடவடிக்கை…உதயநிதி ஸ்டாலின்!!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »