Press "Enter" to skip to content

கோடை வெயிலை சமாளிக்க பின்பற்ற வேண்டியவைகள்:

கோடை காலத்தில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அதற்கு உதவியாக முதலில் இருப்பது காய்கறிகள். காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது மிகவும் சிறந்தது. அதிகமாய் வேகவைத்தோ, பொரித்தோ உண்பதில் எந்த விதமான பயன்களும் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

வெங்காயம் நிறைய சாப்பிடுங்கள். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் வெப்ப அரிப்பு போன்ற நோய்கள் வராமல் வெங்காயம் தடுக்கிறது.
 
பழங்கள்
 
பழங்கள் உண்பது கோடைகாலத்த்துக்கு மிகவும் அவசியமானது. நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடலின் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்வதுடன், உடலின் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகிறது.
 கோடை வெயிலை தவிர்க்க தர்பூசணி சாப்பிடுவது அவசியம் தர்பூசணியில் 90 விழுக்காடு தண்ணீரே இருப்பதால், உடலின் தண்ணீர் பாதுகாக்க சிறந்தது தர்பூசணி. தர்பூசணியை விட அதிக தண்ணீர் சத்துள்ள வெள்ளரிக்காயை அதிகமாய் உட்கொள்ளுங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க |இருதரப்பு மோதல்…! ஜல்லிக்கட்டு வேண்டும்-ஜல்லிக்கட்டு வேண்டாம்
 
உடல் வெப்பம்
 
உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு, வெயில் காலத்தில் இன்னும் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைவதால், வயிறு இழுத்துப் பிடித்தல், அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள்தான் வெளிப்படுத்தும். கண்கள் சூடாக இருப்பது போன்ற உணர்வு, எரிச்சல், சிவந்துபோதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்ற பிரச்னைகள் உருவாகும். நீர்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள், இளநீர், நீர்மோர் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் | Neer Sathukal Athigam Ulla Fruit in Tamil
 
தலை அதிகம் வியர்த்தால் அடிக்கடி துடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். வியர்வையை அப்படியே விட்டுவிட்டால், உடலில் சளி பிடித்துக்கொள்ளும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள், தலை வியர்க்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.
 
அம்மை நோய்கள்
 
வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். குழந்தைகளுக்கு அம்மை வந்தால், அதிகம் சிரமப்படுவார்கள் என்பதால், மருத்துவர் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போடுவதே சிறந்தது. இளநீர், பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், நீர்ச்சத்தைச் சரியாகப் பராமரித்தாலே, அம்மை நோய்களைத் தவிர்க்கலாம். அம்மை நோயின் தாக்கத்தை குறைக்க மஞ்சள், வேப்பிலையை பயன்படுத்தலாம்.

அம்மை நோயிலிருந்து பாதுகாக்க...!! - காணொளி

மேலும் படிக்க |விடுதலை படத்தில் காட்டப்படும் பெருமாள் வாத்தியார் யார்? 
 
உணவு முறைகள்
 
நீர்ச்சத்துள்ள கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி, முள்ளங்கி, நூல்கோல், பீர்க்கங்காய், புடலங்காய், மாதுளை, குழல்பெர்ரி, நுங்கு, வாழை, கீரைகள் என நீர்ச்சத்துள்ள காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். உணவில் புதினா, கொத்தமல்லி, எள்ளு, சீரகம், நன்னாரி விதை, வெந்தயம், எலுமிச்சை போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். எலுமிச்சை, புதினா, இஞ்சி, தேன் கலந்த சாறு அல்லது டீயை தினமும் ஒருவேளை குடிக்கலாம். புதினா இலைகளும், இஞ்சியும் கலந்த மூலிகை டீ எடுத்துக்கொள்ளலாம்.
 நீர்மோர், இளநீர், பதநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற நீர் ஆகாரங்களை சாப்பிட்டுவர, உடல் வறட்சியாகாது. அருகம்புல் சாறு, நெல்லிச் சாறு, தர்பூசணி சாறு, வெள்ளரிச் சாறு, சிட்ரஸ் வகை பழச்சாறுகள் போன்றவை இழந்த நீரை சமன் செய்யும். வெப்பத்தை அதிகரிக்கும் கோதுமை, மைதா, கோழிக்கறி, ஊறுகாய், பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம்.மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள புதினாவின் பயன்கள்...!

Anantmool Seed ( Nannari Seed) at Rs 25000/kg | Pune | ID: 26488643030

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »