Press "Enter" to skip to content

அதிகரிக்கும் கொரோனா வழக்குகள்… அனைத்து மாநிலங்களின் அவசர கூட்டம்..!!!

மைய கட்டுப்பாட்டு வங்கியின் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற 3 நாட்கள் நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் மைய கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வங்கிகளுக்கு மைய கட்டுப்பாட்டு வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ, 6 புள்ளி 5 சதவீதமாகவே தொடரும் என தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி, பணவீக்க கட்டுப்பாடு ஆகியவற்றை கருத்தில்கொண்டு வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என அவர் கூறினார்.

இதையும் படிக்க : அகரம், கீழ்நமண்டி அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்…!

இதனால் வீடு மற்றும் வாகனங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் உயர வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பேசியபோது, உலகப் பொருளாதாரம் மீண்டும் கொந்தளிப்பை எதிர்கொள்வதாகக் கூறிய அவர், வங்கி மற்றும் வங்கி சாரா நிதி அமைப்புகள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

2023 முதல் 2024ம் நிதியாண்டிற்கான பணவீக்கம் 5 புள்ளி 2 சதவீதமாக இருக்கும் எனவும், ஜிடிபி வளர்ச்சி 6 புள்ளி 5 சதவீதமாக இருக்கும் எனவும் அவர் கூறினார். 

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »