Press "Enter" to skip to content

அம்பேத்கரை இழிவு படுத்துகிறார் ஆளுநர்…! சிந்தனைச்செல்வன்…!

நுங்கு புகழ் சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மீது மேலும் 2 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கிய ஷர்மிகாவின் மீது பாய்ந்த புகார்கள் என்ன?

நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகம் வளர்ச்சியடையும் எனக் கூறி வாக்கு மொத்த தமிழ்நாட்டையும் கிடுகிடுக்க வைத்தவர் சித்த மருத்துவர் எனக் கூறிக் கொள்ளும் ஷர்மிகா. குலோப்ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும், பெண்கள் குப்புறப் படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும், நம்மை விட பெரிதாக உள்ள விலங்குகளை நாம் உணவாக சாப்பிட்டால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் வரக்கூடும் என்ற ஷர்மிகாவின் கருத்துக்கள் புயலைக் கிளப்பின. 

வாய்க்கு வந்ததை சொல்லும் மருத்துவர்

மக்களுக்கு எளிய குறிப்புகளை அள்ளி வீசுகிறேன் என்ற பெயரில் வாய்க்கு வந்ததை எல்லாம் புளுகித் தள்ளிய இந்த டாக்டரை உருட்டுக்களின் ராணி என்றே அழைத்து வந்தனர் இணையப் பயனாளர்கள்.  பா.ஜ.க. நிர்வாகி டெய்சி சரணின் மகளான நுங்கு புகழ் ஷர்மிகா பேசிய பேச்சுக்கள் படித்த படிப்புக்கும், வகித்து வரும் வேலைக்கும் துளியும் சம்பந்தம் இல்லாதது போல காணப்பட்டது. 

உடலுறவுக்கும், குழந்தை பிறப்புக்கும் சம்பந்தேமே இல்லை.. குழந்தை என்பது ஒருவரது பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பிறக்கிறது எனக்கூறி மூடநம்பிக்கையில் முத்துக்குளித்தவர் போல பேசி வந்தார். இதையடுத்து மருத்துவர் ஷர்மிகாவிடம் இந்திய மருத்துவ இயக்குநரம் மற்றும் ஓமியோபதி வாரியம் போன்றவை விளக்கம் கேட்டு உத்தரவிட்ட நிலையில் அவ்வப்போது ஆஜராகி வருகிறார். 

 

அடிச்சுவிட்ட ஷர்மிகா.. பீஃப், மார்பகம் பற்றி “அதிர்ச்சி” தகவல்! இந்திய  மருத்துவமுறை இயக்குநரகம் அறிவிப்பு | Indian medical directorate issued  notice to Doctor Sharmika - Tamil ...

4 பேர் கொண்ட குழுவிடம் இதுவரை 3 முறை ஆஜரானபோதும், ஷர்மிகாவின் பதில் எதுவும் முழுமை பெறாமலேயே உள்ளது. இந்த சந்திப்பின்போது ஷர்மிகா வெறும் வாய்மொழியாகவே பதில் அளித்து விட்டு மருத்துவ இயக்குநரகத்துக்கு போக்கு காட்டி வந்தார். 

இந்நிலையில் மீண்டும் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் மருத்துவர் ஷர்மிகா மீது இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஷர்மிகாவின் மருத்துவக்குறிப்புகளை பின்பற்றியதால் பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பதாக எழுத்துப்பூர்வமான புகார்கள் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஆளுநரை கண்டித்து தீர்மானம்…! பேரவையில் நிறைவேறியது.

இதுவரை எழுத்துப்பூர்வமாக பதிலளிக்காத மருத்துவருக்கு எழுத்துப்பூர்வமான புகார் மேலும் ஒரு தலைவலியை உருவாக்கியுள்ளது. இனிமேல் நுங்கு புகழ் ஷர்மிகாவை மருத்துவ ஆணையரகம் நோண்டி நுங்கு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »