Press "Enter" to skip to content

'அந்த' ஒரு வார்த்தை தான்…! ஆளுநரின் ஆட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது…!

கணினிமய சூதாட்ட தடை சட்டம் குறித்த மசோதாவுக்கு ஆளுநர்  ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்.,  பல கண்டனங்களுக்கு  பிறகு  இறுதியாக இந்த ஒப்புதலானது மாநில அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதலாம். 

சட்டமசோதாவை ஆளுனர் ஒப்பித்தால் அளிக்காமல் திருப்பி அனுப்பிய பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக இந்த சட்ட மசோதாவை தமிழக அரசு ஆளுநரின் பார்வைக்காக அனுப்பியிருந்தது. இருந்தும் இரண்டாவது முறையும் அதற்கு ஒப்புதல் வழங்காமல் தாமதித்ததற்கு கண்டன தெரிவித்தும்  வந்தது. மேலும் ஆளுநரின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்தும் எதிர்த்தும் பலர் தங்களது கருத்துக்களைக் கூறி வந்தனர்.
 
இறுதியாக இன்று கணினிமய தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் அறிவித்திருக்கிறார். இது மாநில அரசுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகவே கருதப்படும். மேலும் இது குறித்து பத்திரிக்கையாளர் திரு. குபேந்திரன் கூறுகையில் , ‘ ஆளுநர்  இதுவரை இது போன்ற தீர்மானம் தனக்கு எதிராக வராது, இந்த விஷயத்தில் இப்படி ஒரு எதிர்ப்பு வராது என மெத்தனமாக இருந்திருப்பார். 

அதுமட்டுமில்லாது, சமீப  காலங்களாகவே முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது. அதாவது, வந்தே பாரத் இ தொடர் வண்டிதுவக்க நிகழ்வுக்கும் விமான நிலைய விரிவாக்க நிகழ்ச்சிக்கும் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருந்தார். அந்த சமயங்களில் அவரை வைத்துக்கொண்டு நிச்சியமாக ஒரு 
கண்டனத்தை தெரிவிப்பார்  என ஓர் பத்திரிக்கையாளனாக  எதிர்பார்த்தேன், ஆனால் அந்த நேரத்தில் கூட அவர் மென்மையான அணுகுமுறையையே கையாண்டார். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து இப்படி ஒரு தீர்மானம் வரப்போகும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

 இந்த தீர்மானத்தில் ஒரு விஷயத்தை  நான் முக்கியமாகப் பார்க்கிறேன்: –  முதலமைச்சர் பேசிய ஒருவார்த்தை.  அதாவது, குடியரசுத் தலைவரை பதவி நீக்குவதற்காக நாடளுமன்றத்தில் ‘Impeachment’ எனப்படும் அரசியல் குற்றச்சாட்டு கொண்டுவர முடியும் . அதேபோல , ஆளுநர் களையும் நீக்குவதற்கு சட்டமன்றத்தில் Impeachment அதிகாரம் கொடுக்கப்படலாமா?’ என்று வாஜ்பாய் அமைத்த ஆணையம் கருத்து தெரிவித்திருக்கிறது”  என்ற அந்த ஒரு வார்த்தை. இதுதான் சரியான அடியாக விழுந்தது. 

அதாவது, கவர்னரை பதவி நீக்கம் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்துகின்ற ஒரு வார்த்தைதான் இந்த முடிவுக்கு வழிவகுத்ததாகக் கருதுகிறேன். மேலும் குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடையே நஞ்சைக் கக்குவது போன்று “நான் தமிழக அரசின் கோப்புகளை கிடப்பில் போட்டுவிட்டால் அதை நிராகரிப்பதாக அர்த்தம்'” என அவர்  கூறியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

 

அவரின் இந்த பொறுப்பற்ற செயல்களுக்கு  இந்த தீர்மானம் தான் முட்டுக்கட்டைப் போட்டிருக்கிறது. இதே போன்று இன்னும் பல மசோதாக்கள் இருக்கின்றன அவற்றையும் எப்படி அணுகப்போகிறார் என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

இதையும் படிக்க ;…கணினிமய சூதாட்ட தடை சட்டம்.. அடுத்து என்ன…? –https://www.malaimurasu.com/Online-Gambling-Prohibition-Act–What-next

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »