Press "Enter" to skip to content

பேருந்தின் கூரை மீது பயணம்…! மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய உயர் நீதிமன்றம்…!!

பொதுமக்களிடமிருந்து முதலீடுகளைப் பெற்று பெருமளவில் மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா, ஐஎஃப்எஸ், ஹிஜாவூ நிறுவனங்களின் வழக்கு விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் இடமிருந்து அமலாக்க துறையினர் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்:

சென்னை அமைந்தகரையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் தலைமைச் செயலகம் உள்ளது.  இது மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் அதன் கிளை நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.  இந்நிறுவனத்தில் பல லட்சம் மக்கள் முதலீடு செய்துள்ளனர்.  இந்நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டாளர்களிடம் பெற்ற 2,438 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகப் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் இந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஐஎஃப்எஸ், ஹிஜாவூ நிறுவனங்கள்:

ஏற்கனவே மேற்கண்ட நிறுவனத்தின் மீது மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வரும் நிலையில் மேலும் இரு நிறுவனங்கள் மோசடி வழக்கில் சிக்கியுள்ளன.  ஐஎஃப்எஸ், ஹிஜாவூ நிறுவனங்கள் 2000 கோடிக்கு மேலாக மோசடியில் ஈடுபட்டு இருப்பதை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு விவரங்களை அமலாக்கத் துறையினர் பெற்றுள்ளனர்.

மோசடி தொகை:

ஆருத்ரா சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேரிடமிருந்து முதலீடாக 2438 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 11 பேரை கைது செய்துள்ளனர் ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர்.

இதே போல ஐஎஃப்எஸ் நிறுவனம் சுமார் 80,000 பேரிடமிருந்து 4,000 கோடி ரூபாயை முதலீடாக பெற்று மோசடி ஈடுபட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹிஜாவூ நிறுவனமும் இதே போன்று பொதுமக்களிடமிருந்து  முதலீடுகளைப் பெற்று சுமார் 4000 கோடிக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

இதையும் படிக்க:   “முதல் முயற்சி செய்தது எடப்பாடி அல்ல… நான் தான்….” அமைச்சர் துரைமுருகன்!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »