Press "Enter" to skip to content

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை..! ஜூன் 3ல் திறப்பு…!!

திருநங்கைகளுக்கு அரசு முறையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி  தரவேண்டும் என டெல்லியில் நடைபெற்ற  இந்திய அளவிலான அழகி போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்த பிராக்சி பேட்டியளித்துள்ளார்.

டெல்லியில் இந்திய அளவிலான திருநங்கைகளுக்கு அழகி போட்டி நடைபெற்றது. இந்த அழகி போட்டியில் தமிழ்நாடு சார்பாக கோயம்புத்தூரை சேர்ந்த பிராக்சி என்ற திருநங்கை பங்கு பெற்று,மூன்றாம் இடத்தை பிடித்தார். மேலும் பிராக்சி டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.பிராக்சி வரவேற்கும் வகையில் சக திருநங்கைகள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் 

பிராக்சி தெரிவித்ததாவது “நான் தற்போது தனியார் பல்கலைக்கழகத்தில் துணை ஆசிரியாக பணியாற்றி வருகிறேன். பல்வேறு இடங்களில் திருநங்கைகளுக்கு முறையான இடம் கிடைப்பதில்லை. அழகு போட்டி என்பது ஒரு அழகுக்கான போட்டி இல்லை, அது ஒரு திறமைக்கான போட்டி. இந்த அழகு போட்டியில் இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள திருங்கைகளின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது என்பது தெரிந்து கொண்டேன்” என கூறினார் 

மேலும் “திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது.அடுத்த ஆண்டு இந்திய அளவிலான ஆனழகன் போட்டி நடத்த வேண்டும் என கேள்வியை முன்வைத்துள்ளேன். 

இந்த வெற்றியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நினைக்கின்றேன். திருநங்கைகளுக்கு அரசு முறையான வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்” கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசுகையில் “இந்த போட்டியில் மொத்தமாக 15 திருநங்கைகள் கலந்து கொண்டர். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்து ஒவ்வொரு திருநங்கைகள் கலந்து கொண்டனர். என்னுடைய இலக்கு இந்தியாவில் இருந்து தாய்லாந்து அழகி போட்டி கலந்து கொள்வது. எல்லோருக்கும் கஷ்டம் இருக்கிறது. ஆனால் திருநங்கைகளுக்கு அதிகமாக இருக்கிறது. திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைத்தால்” எல்லாம் மாறும் எனவும் தெரிவித்தார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »