Press "Enter" to skip to content

“கொடநாடு வழக்கில் யாராக இருந்தாலும் சும்மா விடக் கூடாது” ஓபிஎஸ் பேச்சு!

“ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை ஆனால் குடியரசு தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது முதல்வரின் கடமை. முதல்வரின் நடவடிக்கையை வரவேற்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஆல் இந்தியா மில்லி கவுன்சில் தமிழ்நாடு, சிவில் உரிமை பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு சமூக நல்லிணக்க முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தும் பக்ரீத் தியாக திருநாள் சந்திப்பு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் சசிகாந்த் செந்தில், கிறித்தவ நல்லிணக்க பேரவை தலைவர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

சசிகாந்த் செந்தில் மேடைப்பேச்சு:

” 2024 ல் கண்டிப்பாக பாஜக ஆட்சிக்கு வரப்போவது இல்லை. நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் , நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவே பாஜக வின் தற்போதைய அரசியலை நாம் எதிர்க்க வேண்டும்

மணிப்பூரில் உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கிறது.இன்னும் 5 ஆண்டுகளுக்கு அந்த தீ அணையாது, இதே போன்று மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது” .

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மேடைப்பேச்சு:

சனாதன சக்திகளால் நாட்டுக்கு பெரும் தீங்கு, சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது. மணிப்பூரில் என்றைக்கு சனாதன சனியன்கள் காலடி எடுத்து வைத்தார்களோ அன்றிலிருந்து அந்த மண்ணில் வன்முறை நடந்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் கலவரத்திற்கு நூற்றுக்கு நூறு பாஜகவின் வெறுப்பு அரசியல் தான் காரணம், அதனால்தான் அந்த சனியன்களை தமிழ்நாட்டில் நுழையவிடாமல் விரட்டி அடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மேடையில் மோடி என்ன அரசியலைப் பேச வேண்டும் என்று சங்பரிவார் கும்பள்கள் தான் திட்டமிட்டு எழுதி தருகிறது. மணிப்பூரில் இப்படி ஒரு வன்முறையை செய்ய வேண்டும் என்று சங்பரிவார்கள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்று. சூது சூழ்ச்சி நிறைந்த மனித குலத்திற்கு எதிரான கட்சி பாஜக, இந்து மக்களுக்கு எதிரான கட்சி பாஜக. வெறுப்பு அரசியலை பாஜக நிகழ்த்துவதற்கு திட்டமிட்டு வடிவமைத்து தருவது ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தான். இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் பாஜக எதிரியாக பார்க்கவில்லை, அவர்களின் அரசியலுக்கான துருப்புச் சீட்டாக பார்க்கிறது.

ஆர்எஸ்எஸ், சங்பரிவர் அமைப்புகளின் உண்மையான எதிரி அரசியலமைப்பு சட்டம் தான், அந்த அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், அதனால் ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் இவ்வாறு செயல்படுகிறார்.

செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில் :

” பொது சிவில் சட்டம் என்ற பெயரால் தேசத்தில் ஒரு குழப்பத்தை உருவாக்க பாஜக நினைக்கிறது. மணிப்பூரில் இவ்வளவு பெரிய வன்முறை நடக்கும் பொழுது பொது சிவில் சட்டத்தை பற்றி பேசுவது ஒரு திட்டமிட்ட திசை திருப்பும் முயற்சி.  அவர்கள் நல்லெண்ணத்தின் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சிக்கவில்லை மக்களை பிளவு படுத்துவதற்கும் சிறுபான்மையினரை அச்சுருத்துவதற்கும் இது ஒரு திட்டமிட்ட  சதி. 

  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அதனை அறிமுக நிலையிலேயே திமுக காங்கிரஸ் விசிக மதிமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் எதிர்ப்போம்.  பொது சிவில்  சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும்.  மேல்பாதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க  அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். தகுதியுடைய இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களும் முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை என்று முதல்வர் பேசியிருப்பது, பாஜக எதிர்ப்பில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பதை காட்டுகிறது”,  எனக் கூறினார். 

மேலும், அதிமுக பாஜக கூட்டணி உடைந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது. எனக் குறிப்பிட்டவர்,  பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Sugar ஏறிவிட்டது அதற்காக தான் பாதயாத்திரை செல்கிறார் என விமர்சித்தார். ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை ஆனால் குடியரசு தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது முதல்வரின் கடமை. முதல்வரின் நடவடிக்கையை வரவேற்கிறோம் எனக் கூறினார். 

சசிகாந்த் செந்தில் செய்தியாளர் சந்திப்பில் பேடுகையில்:

நாட்டில் விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது அதனை திசை திருப்பவே பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகிறது பாஜக அரசு.

மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகா மாநில அரசு அவர்களுக்கான நிலையை எடுக்கிறார்கள், ஆனால் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் உறுதியாக உள்ளது”, எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க   | பருத்திக்கு பழைய ஜிஎஸ்.டி நிலுவை வரி ரத்து..! 50-வது ஜி.எஸ்.டி. கூட்டத்தில் அறிவிப்பு.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »