Press "Enter" to skip to content

சாராய வழக்கில் நாட்டாமையை தூக்கிய காவல் துறையினர்… நாட்டாமை இல்லாததால் நின்ற திருமணம்!!

நெல்லையில், அரசு பேருந்தில் 10ரூபாய்க்கு பதில் 15 ரூபாய் அனுமதிச்சீட்டு வழங்கிய நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், நடக்கும் சம்பவங்களை எல்லாம், அதே பேருந்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்த நீதிபதியிடம், 16ரூ அனுமதிச்சீட்டு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து, நேற்று, திருச்செந்தூருக்கு சென்ற ஒரு அரசு பேருந்தில் பயணிகள் சிலர், நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு நுகர்வோர் வழக்கு தொடர்பான வாய்தாவுக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பயணிகளிடம்  நீதிமன்றத்திற்கு செல்ல நடத்துனர் 15 ரூபாய் அனுமதிச்சீட்டு  கொடுத்துள்ளார். ஆனால், முறையான கட்டணமோ, ரூ 10 தான்.

அதனை, நடத்துனரிடமே வெளிப்படையாக, ஒரு நபர் கேட்டுள்ளார். அவற்றை, அருகிலிருந்த நபர் ஒருவரும், தனது தொலைபேசியில் விடியோவாக பதிவு செய்துள்ளார். அப்பொழுது, நடத்துனரிடம், 10ரூ அனுமதிச்சீட்டுடிற்கு ஏன் 15ரூ அனுமதிச்சீட்டு கொடுக்கிறீர்கள்? என கேள்வி எழுப்ப, அவரோ, கொரோனா காலத்தில் 10ரூ வசூலிக்கப்பட்டது. நீங்கள் இப்போ 10ரூ கேட்டல் என்ன நியாயம் எனக் கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நபர், நடத்துனரிடம், கட்டண தொகை பட்டியலை காண்பிக்குமாறு கேட்டதற்கு, நாங்கள் சீனியர், அதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை, எனவும் கூறியுள்ளார். மேலும் அந்நபர், நடத்துனரிடம் பேட்ச் மற்றும் நம்பர் கேட்கவே, நடத்துனர் ஆத்திரமடைந்துள்ளார். 

அப்பொழுது, எங்க கிட்ட வம்பு இழுக்கனுமென்றே பேருந்து நிலையத்தை சுத்தி வருவீர்களா? நீங்கள் யார் என்னிடம் பேட்ச் கேட்பதற்கு? என ஆவேசத்துடன் பேசியவாறே, 10ரூ அனுமதிச்சீட்டை கொடுத்துவிட்டு நகர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள், கேள்வி கேட்டல் மட்டும் 10ரூ, இல்லையென்றால், 15ரூ-யா? என அதிரமடைந்துள்ளனர்.

இதில் வேடிக்கை என்னவெனில், அதே பேருந்தில் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் பயணித்துள்ளார். பேருந்தில் நடப்பதை எல்லாம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு, நீதிமன்றத்திற்கு அனுமதிச்சீட்டு கேட்டுள்ளார். 

அங்கு நடந்த சலசலப்பில் குழம்பிய நடத்துனர், நீதிபதியிடம் 10 ரூபாய் பெற்றுக்கொண்டு  16 ரூபாய்க்கு அனுமதிச்சீட்டை வழங்கியுள்ளார். பின் பேருந்திலிருந்து இறங்கி நீதிமன்றத்திற்கு நடந்து செல்லும் வழியில், பேருந்தில் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகளிடம், அந்த நீதிபதி விவரம் கேட்டுள்ளார். அப்போது தான், அவருக்கு வழங்கிய அனுமதிச்சீட்டை சரி பார்க்கும் போது, அரசு பேருந்து நடத்துனர் நீதிபதிக்கு கொடுத்தது 16 ரூபாய் அனுமதிச்சீட்டு என்பது தெரிய வந்தது .

இதனை அடுத்து கோபமடைந்த நீதிபதி, நுகர்வோர் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த அரசு போக்குவரத்து கழக வழக்கறிஞர் மற்றும் ஊழியர்களிடம் தான் நேரில் பார்த்தவற்றை கூறி நடத்துனர்களின் மோசமான செயல்பாடு குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய கவனம் செலுத்துமாறு கூறுங்கள் என்று அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் பல மாதங்களாகவே, அரசு பேருந்துகளின் இயக்கமும் மற்றும் ஊழியர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளித்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, நெல்லை மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில், பணியில் முறையாக கவனம் செலுத்தாத அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதையும் படிக்க: ஓசி டீ-க்கே பரிதாப நிலை… அப்போ ரூ 12 லட்சம் லஞ்சம்-னா?

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »