Press "Enter" to skip to content

மருத்துவ கல்வி தரவரிசை பட்டியல்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியீடு!

ஒட்டன்சத்திரம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை எனவும், முறையாக பாடம் நடத்துவது இல்லை எனவும் பெற்றோர்கள் குற்றச்சாட்டு.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் கே.ஆர்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கில வழிக் கல்வி தொடங்கப்பட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த ஆங்கில வழிக் கல்வியில் இந்த ஆண்டு 2023 முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை என்றும், இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு முறையாக பாடங்கள் சொல்லித் தரவில்லை என்றும் வீட்டுப்பாடம் எழுதி தரவில்லை என்றும் மாணவர்களின் செயல்பாடு குறித்து whatsapp மூலம் தினந்தோறும் தகவல் வந்த நிலையில் இந்த ஆண்டு எவ்வித தகவலும் இதுவரை வரவில்லை என்றும் கூறி பெற்றோர்கள் புகார் செய்தனர்.

 

அதோடு, அந்த மாணவர்களுக்கு அரசு பள்ளி மூலம் வழங்கக்கூடிய புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், மேலும்,  ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்கள் எந்த வித படிப்பும் இதுவரை படிக்கவில்லை என்றும் கூறி இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

 இது பற்றி பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- 

இப்பள்ளியில் சுமார் 263 மாணவர்கள் சேர்க்கப்பட்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வந்தனர். இந்நிலையில் அரசு பள்ளிக்கல்வித்துறை  ஒன்றாக இருந்து வந்தது தற்போது அவை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தொடக்க கல்வித்துறை என தனியாக பிரிக்கப்பட்டு விட்டது. அதேபோல் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இடைநிலைக் கல்வித் துறை என பிரிக்கப்பட்டு விட்டதால் இதுவரை இடைநிலை கல்வி துறையில் இருந்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் கற்பித்து வந்தனர்.

 இந்த துறை இரண்டாக அரசால் பிரிக்கப்பட்ட சூழ்நிலையில் அவ்வாறு இடைநிலை கல்வி துறை மூலமாக இந்த பள்ளியில் பணியமர்த்தப்பட்ட 10 ஆசிரியர்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். அதனால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டதால் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு  குறிப்பிட்ட 4 ஆசிரியர் மட்டுமே உள்ளனர்.

மேலும் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பிற்கு ஆங்கில வழிக் கல்வி சார்பாக அட்மிஷன் போடவில்லை என்று கூறினார்.

தற்போது தங்கள் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியில் இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 155 மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது நான்கு ஆசிரியர்களே உள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் ஆசிரியர்கள் போதாது என்று மாவட்ட கல்வித்துறை அலுவலரிடம் கூறியுள்ளோம் எனக்  கூறினார். 

மேலும், தற்போது  இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இன்னும் பத்து பதினைந்து தினங்களில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதாக கூறியுள்ளார்.

அதனால் ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் பூர்த்தி செய்வோம் என்றும் நகரப் பகுதியில் ஆங்காங்கே தொடக்கப் பள்ளிகள், ஆங்கில வழிக் கல்வியில் செயல்பட்டு வருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்காங்குள்ள அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளுமாறும் இது இடைநிலைப் பள்ளி என்பதால் இனிமேல் இங்கு ஆங்கில வழிக் கல்வி இருக்காது என்றும், அடுத்த ஆண்டும் அட்மிஷன் இருக்காது என்று தெரிவித்தார்.

தற்போது படித்து வரும் மாணவர்களுக்கு போதிய ஆசிரியர் நியமிக்கப்பட்டு அவர்கள் ஐந்தாம் வகுப்பு முடியும் வரை தொடர்ந்து இங்கேயே படிப்பார்கள் என்றும் கூறினார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் பெற்றோரிடமும் அரசு சார்பில் பள்ளி தலைமை ஆசிரியரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இதில் உள்ள நடைமுறை சிக்கலை எடுத்து கூறினார்கள். அதன்பின் பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிக்க    | காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனை..! ”காவலர்களுக்கு தெரியுமா?.. ”

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »