Press "Enter" to skip to content

ஜெய்பீம் குழுவின் “சத்யதேவ் அகாடமி”.. பாராட்டுக்கள் தெரிவித்த முதலமைச்சர்!

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44-வது விருது வழங்கும் விழாவில், “அகரமிலிருந்து வரும் மாணவர்களின் தனித்தன்மை வேறு என்று கல்லூரியில் கூறுகிறார்கள்‌, Leadership quality அகரம் மாணவர்களிடம் இருக்கிறது” என்று பெருமிதத்துடன் பேசியுள்ளார்.

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44-வது விருது வழங்கும் விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் சிவக்குமார் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் உள்ள 5 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 2 ஈழத்தமிழர் மாணவர்கள், பெற்றோர்களை இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த மாணவர்கள் என 25 அரசுப்பள்ளி 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தலா ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

நடிகர் கார்த்தி மேடையில் பேசுகையில், இந்த காலக்கட்டம் முக்கியமானது. அனைவரும் படிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்து தன் மாமாவின் உதவியால் படித்து உயர்ந்தவர் என் அப்பா. ஒருவன் படித்து விட்டால் அவன் தலைமுறையே  செழிக்கும் அதற்கு நாங்களே சாட்சி. 

அகரம் விருது வழங்கும் விழா 44 வருடத்தில் வந்து நிற்கிறது, அதுவே மகிழ்ச்சி. கிராமபுறத்தில் இருந்து படித்து ஒருவன் 50 மதிப்பெண் வாங்குவதற்கும் சென்னையில் படித்து ஒருவன் 100 மதிப்பெண் வாங்குவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. தன்னம்பிக்கையை எப்போதும் கொண்டிருங்கள் எல்லோராலும் முடியும். தமிழ் மீது அகரம் மாணவ மாணவிகளுக்கு ஆர்வம் அதிகம். இவ்விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி, என பேசியுள்ளார்.

நடிகர் சிவகுமார் மேடையில் கண் கலங்கி பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “இந்த குழந்தையின் கதைகளை கேட்கும் போது நெஞ்சு அடைக்கிறது. என்னுடைய வாழ்க்கையும் கிட்டத்தட்ட உங்கள் நிலைமைதான். என் அம்மா அப்போதே அரளி கொட்டையை அரைத்து கொடுத்திருந்தால் 1941-லேயே சென்றிருப்பேன். அவள் செய்யவில்லை. இப்போது இங்கு நிற்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், “தீபாவளி போன்ற பண்டிகை கொண்டாடியது கிடையாது. அப்போது நாங்கள் படிப்பதற்கு கட்டணம் தான். 750 ரூபாய் கட்டி முழு படிப்பையும் முடித்தேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. LKG படிப்பதற்கே இப்போது 3 லட்சம் ஆகிறது. என்னை படிக்க வைத்தது ஐயர் வாத்தியார் தான். படிக்கும் படி வற்புறுத்தினர். நான் 4-வது ரேங்க் தான் எடுப்பேன். காசு இல்லாததால் அப்போது புகைப்படம் கூட எடுத்துக் கொள்ள முடியவில்லை. 192 படங்கள் நடித்து விட்டேன். 40 கோடி frame-ல் இருந்த எனது புகைப்படம், அந்த 5 ரூபாய் புகைப்படத்தில் இல்லை. திரும்ப அவர்களை வைத்து 50 ஆண்டுகளுக்கு பிறகு அந்த புகைப்படத்தை எடுத்து விட்டேன். 7 ஆண்டுகள் படம் வரைந்தேன். அதை புத்தகமாக எனது மகன்கள் போட்டுள்ளனர். அதுதான் என்னுடைய அடையாளம். நான் ஓவியனாக வாழ்ந்திருந்தால் சத்தியமாக கல்யாணம் செய்திருக்க மாட்டேன். அது மாறியதால் நல்ல குழந்தைகளை பெற்றெடுத்ததால் இப்போது இந்த மேடையில் நிற்கிறேன்‌”, என நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார்.

அதன் பிறகு, நடிகர் சூர்யா மேடையில் பேசுகையில்,” 44 ஆண்டுகள் அன்பாக கேட்டுக் கொண்டதால் இவ்விழாவை சிறப்பித்துள்ளனர். இதற்கு ஆரம்ப புள்ளி, ஆறுமுகம் அவர்கள் தான். தற்போது ஒரு வேர் மாதிரி பரவி இருக்கிறது. எல்லோருக்கும் சமூக பொறுப்பு, சமூக அக்கறை இருக்க வேண்டும். அந்த சமூக அக்கறை எங்களுக்கும் இருக்கிறது. தன்னலம் பார்க்காத ஆர்வலர்களால் தான் இப்படி ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. மாணவர்களின் பயணம் சாதாரண பயணம் கிடையாது. அர்த்தம் ஆனதாக பார்க்கிறேன்” நேரு பொறுப்புணர்ச்சியுடன் பேசியுள்ளார்.

 

image

மேலும், “அகரமிலிருந்து வரும் மாணவர்களின் தனித்தன்மை வேறு என்று கல்லூரியில் கூறுகிறார்கள்‌. Leadership quality அகரம் மாணவர்களிடம் இருக்கிறது. Sympathy வேறு… Empathy வேறு‌. பெண்கள் மீதான அந்த பொறுப்பு எனக்கே இப்போது தான் வந்துளள்து. சரியாக வீடு கூட இல்லாத மாணவர்களுக்கு அகரம் மாற்றத்தை கொடுத்துள்ளது என்பதில் சந்தோசம். தன்னார்வலர்களுக்கு நன்றி. கல்வி ரொம்ப முக்கியம். கல்வி மூலம் வாழ்க்கையை படியுங்கள்‌. சமூகத்தில் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறது. வாழ்க்கையை தெரிந்து கொள்ள முக்கியம் கல்வி. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கும் தலைவணங்கி நன்றி கூறுகிறேன். 3 வருடம் அகரம் அரசோடு சேர்ந்து இயங்கி வருகிறது. சமமான கல்வி கொடுக்க வேண்டும் என்று 5,200 மாணவர்களின் வாழ்க்கையை தொட முடிந்துள்ளது, 14 வருடத்தில். அரசோடு சேர்ந்து பயணிக்கும் போது 1 லட்சம் மாணவர்களை தொட முடிந்தது” எனறு கூறியுள்ளார்.
 
மேலும், “தன்னார்வலர்கள் மூலம் தான் இதுவரை வந்துள்ளோம். அகரம் எங்களுடையது கிடையாது. உங்களுடையது. நம்முடையது. அகரம் கதவு எப்போதும் திறக்கப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »