Press "Enter" to skip to content

“மனிதர்களும் விலங்குகளும் இணைந்து வாழும் இந்தியா” சுப்ரியா சாஹூ பெருமிதம்!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. 

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனையொட்டி கடந்த மாதம் 23-ம் தேதி காங்கிரஸ், திமுக., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து அடுத்த கூட்டம் ஜூலை 17-ம் தேதி பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது.

இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் பெங்களூருவில் கூடுகிறார்கள். அப்போது தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்க இருக்கின்றது.

காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க. 

, திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்கின்றன. மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சா் நிதிஷ்குமாா் உள்ளிட் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுவரை டெல்லியில் குடிமைபணி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசர சட்டத்தை சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யப்பட உள்ள விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருப்பதால், பெங்களூருவில் நடைபெறும் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பது மேலும் உறுதியாகியுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணியளவில் பெங்களூா் புறப்பட்டு செல்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிக்க:சிப்காட் அமைக்க எதிர்ப்பு; விவசாயிகள் நெற்றியில் நாமத்துடன் போராட்டம்!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »