Press "Enter" to skip to content

அதிரடி சலுகைகளுடன் ஆடித் தள்ளுபடி; அதிகாலையிலே திரண்ட தாய்குலங்கள்!

கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் காய்கறிகளின் விலை அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் சமையலுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் ஒன்றாக இருக்கக்கூடிய தக்காளியின் விலை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்று வருவது பலத்தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், பல்வேறு அத்தியாவசிய பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் நகர் பகுதியில் சுற்றுலா  முக்கியமாக உள்ளது. கொடைக்கானலை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் இருந்து வருகிறது.

குறிப்பாக வில்பட்டி ,அட்டுவம்பட்டி, பூம்பாறை, பள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களில் முக்கிய மலைப்பயிர்களான பீன்ஸ், கேரட் உருளைக்கிழங்கு, முள்ளங்கி , பீட்ரூட் மலைபூண்டு உள்ளிட்டவை விவசாயிகளால் பிரதானமாக விளைவிக்கப்படுகிறது. ஆங்கில காய்கறிகள் என்று அழைக்கப்படும் இவ்வகையான காய்கறிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைந்த விலையிலேயே விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தற்போது ஆங்கில காய்கறிகள் வரத்து குறைவால் மலை காய்கறிகளின் விலை ஏற்றத்தை கண்டுள்ளது. மொத்த வியாபாரத்தில் பீன்ஸ் 100 ரூபாய்க்கும் , கேரட் 60  ரூபாய்க்கும் , பீட்ரூட் , முள்ளங்கி உள்ளிட்டவை 50 ரூபாய்க்கு மேல் விற்பனை அடைந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். மேலும் மலைக்க காய்கறிகளின் விலை ஏற்றத்திற்கு முக்கிய காரணம் வரத்து குறைவு தான் என்றும் கூறப்படுகிறது.

மேலும்,  ஒரு சில இடங்களில் பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் நோய் தாக்குதலின் காரணமாக வரத்து குறைந்து உள்ளதாகவும்.
 இதுவரை இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் மலை காய்கறிகள் விலையில் ஏற்றம் கண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விலையை தொடர்ந்து மலை காய்கறிகளின் விலையும் ஏற்றமடைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க   | உச்சத்தை தொட்ட தக்காளி விலை : அடுத்தக்கட்டமாக தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலையில் விற்பனை!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »