Press "Enter" to skip to content

நாகப்பட்டினம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து..!

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த திட்டமிடும் வகையில், பெங்களூருவில் 24 கட்சிகள் பங்கேற்புடன் தேசிய அளவிலான எதிர்கட்சிகள் கூட்டம் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவை வீழ்த்தும் வகையில் வலுவாக கூட்டணி அமைக்கும் பணிகளை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் முன்னெடுத்தார். இதன் எதிரொலியாக திமுக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, டி.எம்.சி உள்ளிட்ட 15 கட்சிகளின் பங்கேற்புடன் பீகாரின் பாட்னாவில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 2வது கூட்டம், பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.

இன்று மாலை விருந்துடன் நடைபெறும் கூட்டத்தில் சோனியா காந்தி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய பேச்சுவார்த்தை நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து திமுக, வி.சி.க, மதிமுக உள்ளிட்ட 24 கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.

இதையும் படிக்க : அமைச்சர் காரில் சிக்கிய டைரி…தீவிர சோதனையில் அமலாக்கத்துறையினர் !

டெல்லி அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக காங்கிரஸ் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆம்ஆத்மியும் இக்கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூருவுக்கு சென்றடைந்த நிலையில், பீகார், மேற்குவங்கம், கர்நாடகா, ராஜஸ்தான், ஜார்கண்ட் என 5 மாநில முதலமைச்சர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு சோனியாகாந்தியும் ராகுல்காந்தியும் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

மகாராஷ்டிரா மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவதால் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதபோதும், மகள் சுப்ரியே சூலேவுடன் நாளைய கூட்டத்தில் பங்கேற்பதாக என்.சி.பி தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். 

தெலங்கானா முதலமைச்சர் கே.சி.ஆர், ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியன இக்கூட்டத்தில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »