Press "Enter" to skip to content

பொன்முடி வீட்டில் ரெய்டு: கெஜ்ரிவால் கண்டனம்..!

அமைச்சர் பொன்முடி வீட்டில் நடைபெறும் அமலாக்கத் துறை சோதனைக்கு முகாந்திரம் இல்லை என்று வீட்டு வசதி, மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு முத்துசாமி கூறியுள்ளார். 

ஒண்டிபுதூர் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளை வழங்கினார். 

பின்னர்,  செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சோதனையால் யாரும் தொய்ந்து விடப் போவதில்லை என்றும் அமைச்சர் பொன்முடி விரைவில் மீண்டு வருவார் என்றும் கூறினார். பெங்களூருவில் எதிர்கட்சிகள் கூட்டம் சிறப்பாக நடைபெறும் என்றும் கூறினார்.

மேலும், அமலாக்கத் துறை சோதனைக்கு முகாந்திரமான செய்தி இல்லை என்றும்,  இந்த சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது என்றும் சாடினார். மேலும்,  இதனால் யாரும் தொய்வடைந்து விட போவதில்லை எனவும், அமைச்சர் பொன்முடியிடம் தவறு இருக்க முடியாது என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

அவர் மிக விரைவில் மீண்டு வருவார் என்றும்,  இந்த சோதனையால் பயத்தை ஏற்படுத்தி விட முடியாது என்று கூறியவர்,  எங்களது கவனத்தை திருப்ப முடியாது; எங்களது பணிகள் வேகமாக போகும் என்கிறார். பெங்களூர் எதிர்கட்சிகள் கூட்டம் சிறப்பாக நடக்கும்”, எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் தொழிலாளர்கள் பிரச்சனைகள் குறித்து தொழிற்சங்கங்கள் மனு அளித்துள்ளதாகவும், அப்பிரச்சனைகளை தீர்க்க தொழிற்சங்கங்கள் உடன் ஒப்பந்தம் போட தயார் எனவும் தெரிவித்தார்.

தொழிலாளிகள் பிரச்சனையை தீர்த்தால் தான் அவர்கள் நிம்மதியாக வேலை செய்ய முடியும். கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தொழிலாளிகள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

டெட்ரா பேக் உடனடியாக வர வேண்டும் என நான் சொல்லவில்லை. அது குறித்து ஆய்வு செய்கிறோம் என்று தான் சொன்னேன்.ஆலோசனைகளை அன்பாக சொன்னால் கேட்போம். அதற்கு பதிலாக ஏன்  திட்டுகிறார்கள்?

டெட்ரா பாக்கெட், பாட்டில் இதில் எது சிறந்ததோ அதை செய்வோம். 

ஆய்வு செய்து அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு அத்திட்டம் கொண்டு வரப்படும். 90 மி.லி. மது குறித்து கடுமையாக பேசுகிறார்கள். டெட்ரா பேக், 90 மி.லி. மது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. அவை வந்தாலும் வரலாம். வரமாலும் போகலாம்

காலையில் குடிப்பவர்கள் குடிகாரர்கள் என்றால் பொறுத்து கொள்ள முடியாது. கடுமையான வேலை செய்பவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள்.  இதற்கான மாற்று வழி ஆலோசனை சொல்லுங்கள்

டாஸ்மாக் மூலம் பெரிய வருமானம் வர வேண்டும் என்ற எண்ணம் இல்லை. எந்த திட்டத்தையும் யாரையும் பாதிக்காத வகையில் செய்வோம்”, என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். 

இதையும் படிக்க    | “மது வாங்க வரும் 21க்கும் குறைவான வயதினருக்கு, ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்படும்” அமைச்சர் சு முத்துசாமி!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »