Press "Enter" to skip to content

மும்பை: தொடர் ஷுட்டிங் செட்டுக்குள் நுழைந்த சிறுத்தை..!

இனியொரு முறை பாஜகவுக்கு வாய்ப்பளித்தால் இந்தியாவும், இந்திய அரசியல் சட்டமும் தாங்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இம்மாதம் 20-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த மழைக்கால கூட்டத் தொடர் அரசியல் கட்சியினரிடையே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.  ஒருபுறம் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக திமு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் நெருக்கடி கொடுக்க திட்டம் தீட்டி வரும் நிலையில், மறுபுறம் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. 

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தமிழகம் சார்பில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

9 ஆண்டு கால மத்திய பாஜக. ஆட்சியில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து உரக்க குரல் எழுப்புவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஜி.எஸ்.டி. இழப்பீடு பறிப்பு, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஆளுநர், மின் கட்டணத்தை உயர்த்தும் உதய் திட்டத்தை கைவிட வேண்டும், தமிழ்நாட்டிற்கு நீட் நுழைவு தேர்வில் விலக்கு, இந்தி திணிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது. 

எய்ம்ஸ் திட்டம், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, தொடர்வண்டித் துறை திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது,விலைவாசி உயர்வு, மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தின்போது குரல் எழுப்புவது என முடிவு செய்யப்பட்டது. 

குறிப்பாக, பாஜகவுக்கு இனியொரு முறை வாய்ப்பளித்தால் இந்தியாவும், இந்திய அரசியல் சட்டமும் தாங்காது என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   | “ஜெயலலிதாவின் பொருட்கள், அவரது நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டது” லஞ்ச ஒழிப்புத்துறை பதில்!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »