Press "Enter" to skip to content

சட்டமன்றத்தை கூட்ட ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்த மணிப்பூர் அமைச்சரவை…!

காவிரியிலிருந்து உரிய நீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள குறுவை சாகுபடி நெற்பயிர்களைக் காப்பாற்றும் நோக்கில் எழுதியுள்ள கடிதத்தில், காவிரி டெல்டா பகுதிகளில்  குறுவை சாகுபடியும், சம்பா நெல் விதைப்பும் கர்நாடகாவிலிருந்து வரும் நீரை மட்டுமே சார்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மாதாந்திர அட்டவணைப்படி,  தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை  நிர்ணயித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கர்நாடகம் முழுமையாக மதிக்கவில்லை என்றும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை என்றும் முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல், ஜூலை மாதம் 31-ம் தேதி வரை கர்நாடகாவிலிருந்து பிலிகுண்டுலுவிற்கு 40.4 டி. 

எம்.சி. தண்ணீர் வந்து சேர வேண்டிய நிலையில், 11.6 டி. 

எம்.சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரி டெல்டாவின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்  26 புள்ளி 6 டி. 

எம்.சி. அளவில் மட்டுமே உள்ளதாகவும், இது குடிநீர் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளுக்கு 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர், குறுவை நெற்பயிர் முதிர்ச்சியடைந்து, அதிக மகசூல் பெற, இன்னும், 45 நாட்கள் தண்ணீர் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.  

இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாகத் திறந்துவிடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவும் கர்நாடக அரசுக்கு  உரிய அறிவுரைகளை வழங்கி குறுவை நெல் பயிர்களையும், தமிழ்நாட்டு  விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க || ராகுல்காந்தியின் தண்டனை நிறுத்தி வைப்பு… வழக்கு கடந்து வந்த பாதை!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »