Press "Enter" to skip to content

அடிதடியை நிறுத்த சாதுர்யமாக ’தேசியகீதம்’ பாடிய மாணவிகள்….! மதிக்காமல் சண்டையிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள்.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், உட்கட்சி பூசல் காரணமாக பொதுமேடைகளில் சண்டை போடுவதை நிறுத்திக்கொள்றுமாறு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸடாலின் எச்சரித்துள்ளார் 

திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில்  காணொலி காட்சி இன்று நடைபெற்றது. திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், தேர்தல் பரப்புரை குறித்து ஆலோசிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய திமுக தலைவர் முக ஸ்டாலின், ஒரு சில மாவட்டங்களில் நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்ற தகவல் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்த அவர்,  இது உங்களுக்கும் நல்லதில்லை, கழகத்திற்கும் நல்லதில்லை. அதுவும் குறிப்பாக, பொதுமேடைகளில் சண்டை போடும் காட்சிகளை வாட்சப்பில் நானே பார்க்கிறேன் என எச்சரித்தார். 

தென்காசியில் மாவட்டச் செயலாளருக்கும், ஒன்றியப் பெருந்தலைவருக்குமான மோதல் அனைத்து ஊடகங்களும் முன்னிலையில் ஆர்ப்பாட்ட மேடையில் நடந்தது. அதன் பிறகுதான், மாவட்டச் செயலாளர் மாற்றப்பட்டுள்ளார். மேலும், அமைச்சர் மஸ்தான் மாவட்டத்தில், நேருக்கு நேர் மோதல் ஏற்படுகின்றது. தன்னைக் கேள்வி கேட்பவர்களுக்கு மைக் வைத்து அமைச்சர் பதில் சொல்கிறார். இதை  

எல்லா ஊடகங்களும் பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி ஊடகங்களை பதிவு செய்வதே அமைச்சர்களுக்கு தெரிவதில்லை என சாடினார். 

தொடர்ந்து பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம்  

எல்லா தொண்டர்களுக்கும் பொதுவானது நிர்வாகிகளுக்கு மட்டுமே கழகம் சொந்தம் இல்ல! ஆட்சி அனைவருக்கும் பொதுவானது! அமைச்சர்கள், எம். 

எல்.ஏ.க்களுக்கு மட்டுமே ஆட்சி சொந்தமல்ல எனக் கூறினார். மேலும், கழகம் ஆட்சிக்கு வந்தபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. வருத்தம்தான் பட்டார்! இனி கட்சி என்ன ஆகும்? என்று வருந்தினார். தலைவர் கலைஞர் அவர்கள்தான் கட்சியையும் ஆட்சியையும் ஒருசேர வளர்த்தெடுத்தார். அத்தகைய பாணியை நாமும் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்தார். 

ஆட்சியைப் கைப்பற்ற கட்சி பயன்பட வேண்டும். கட்சியைப் பலப்படுத்த ஆட்சி துணை புரிய வேண்டும். அதற்கு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அணிச்செயலாளர்கள், உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் ஒற்றைச் சிந்தனையுடன் செயல்பட வேண்டும். ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல் வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதையும் படிக்க:முன்னாள் எம். 

எல்.ஏ மீதான கடத்தல் வழக்கு; 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »