Press "Enter" to skip to content

உலக வில்வித்தை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கணை…!

விளையாட்டுப் போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களிடம் புத்துணர்வை ஏற்படுத்தும்  நோக்கத்துடன் தென்னிந்திய அளவில் நடத்தப்படும் ‘ஈஷா கிராமோத்ஸவம்’ என்ற மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா இம்மாதம் தொடங்க உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் நடைபெற்றது.

ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் 15வது முறையாக விளையாட்டு விழா நடத்த உள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக தமிழ்நாடு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி என மொத்தமாக ஐந்து மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடைபெற உள்ளது. இதில் 25 ஆயிரம் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் களம் இறங்க உள்ளதாகவும், 

இது தொடர்பாக ஈஷா பிரமோற்சவம் குழுவின் பல ஒருங்கிணைப்பாளர் சுவாமி நகுஜா செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்:- 

ஆண்களுக்கு வாலிபால் போட்டியும் பெண்களுக்கு துரோபால் போட்டியும் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டி என நான்கு பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடத்த இருக்கிறோம். வரும் 
ஆகஸ்ட் மாதம் 12ஆம் தொடங்கி செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி வரை விளையாட்டு போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்தார். 

Fourteenth Isha Gramotsavam – The Largest Sporting Arena of Rural Tamil  Nadu! 

மேலும், 14 வயதைக் கடந்த யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்க முடியும் என்பதால் பல ஆண்டுகளாக விளையாட வாய்ப்பின்றி இருந்த குடும்பப் பெண்களும் முதியவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து விளையாடும் ஒரு விதமான வித்தியாசமான அனுபவத்தை போட்டியில் இருந்து பெறுவார்கள் எனவும்,  இதன் மூலம் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அடுத்த கட்டமாக மாநில அளவில் தேசிய அளவில் பன்னாட்டு அளவில் மிகப்பெரிய விளையாட்டு வீரர்களாக மாறும் வாய்ப்புள்ளது. என்றும் தெரிவித்தார். 

Stop Watching, Start Playing!

தொடர்ந்து பேசிய அவர், “ இதுவரையிலும் 8,412 அணிகளும் சுமார் ஒரு லட்சம் வீரர்களும் கிராமோத்சவ போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.  விளையாட்டு என்பது அனைவருக்கும் பொதுவனது சாதி மத வேறுபாடின்றி இன்றி அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்”, என்றும்  எந்தவிதமான நுழைவு கட்டணமும் இன்றி விளையாடக்கூடிய விளையாட்டு வீரர்கள் உடைய அடிப்படை வசதிகள் அனைத்தும் இலவசமாக ஈஷா அமைப்பு செய்து தருவதாகவும் தெரிவித்தார். 

இதன் இறுதிப் போட்டிகளில் கடந்த காலங்களில் பாரத குடியரசுத் தலைவர் பி பி சிந்து, சேகர் தவான், வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல இந்த ஆண்டும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தார்.

இதையும் படிக்க   |  திருச்சியில், ஆர்பிட்டல் அதெரெக்டாமி சிகிச்சை முறை அறிமுகம்!!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »