Press "Enter" to skip to content

’ பிராட்பேண்ட்’ இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு…!

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வெர்ஷன் ஐபோன் 15ல், சில அதிரடி அப்டேட்டுகள் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெக் ஜெயண்ட் ஆன ஆப்பிள் நிறுவனம், தனது ஐ போன்களில் புதிய டிசைன்களை மேற்கொண்டு, குறுகிய கால இடைவெளியில், அடுத்த வெர்ஷன் போன்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்போதைய மாடல் ஆன ஐபோன் 14ல் டைனமிக் ஐலாண்ட் என்கிற அம்சத்தை கொடுத்திருந்த நிலையில், அது ஆப்பிள் பயனர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், தற்பொழுது அடுத்த வெர்ஷனான ஐபோன் 15 ஐ வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இதில், ஆப்பிள் நிறுவனம் நீண்ட நாட்களாக முயற்சித்துக்கொண்டிருக்கும் பெசல் லெஸ் (Bezel less display) இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2017ல் ஐபோன் எக்ஸ் வெளியான போதே, டிஸ்பிளே ஸ்க்ரீனின் அளவை பெரிதாக்குவதற்கும், சுற்றிலும் உள்ள Bezel ஐ சுருக்குவதற்கும் முயற்சித்து வந்தது.

இந்நிலையில், தற்போது இதற்காக low injection pressure over molding (LIPO) என்னும் புதிய தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஐபோன் 15ல் 1.5 mm அளவில் Bezel இன் அளவு சுருக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த செயல்முறை, முன்னதாக ஆப்பிள் வாட்ச் 7 சீரிஸில் உபயோகப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும், தற்போதைய மாடல் ஆன ஐபோன் 14ல் உள்ள டைனமிக் ஐலாண்ட் அம்சம், அடுத்து வெளியாகவிருக்கும் ஐபோன் 15ல்  சுருக்கி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதே போல், ஐபோன் 15ல் டைட்டானியம் பிரேம், யுஎஸ்பி சி போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட A17 பையானிக் சிப் போன்ற அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் என, முன்பே தகவல் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க || இந்தியாவில் “ஆப்பிள் பே”… எப்பொழுது செயல்பாட்டிற்கு வரும்?

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »