Press "Enter" to skip to content

பழநியில் தக்காளி விற்பனை அதிரடி குறைவு…ஆனந்தத்தில் பொதுமக்கள்!

சென்னை பல்கலைகழகத்தின் 165வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். 

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழக வளாகத்தில் சென்னை பல்கலைகழகத்தின் 165வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக இவ்விழாவிற்கு வருகை தந்த குடியரசுத் தலைவருக்கு, ஆளுநர் மாளிகையில், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. 

இதையும் படிக்க : கை அகற்றப்பட்ட குழந்தை திடீரென உயிரிழப்பு…! தவறான சிகிச்சை தான் காரணமா?

ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 416 பேர் இளங்கலை மாணவர்களும், 564 பேர் முதுகலை மாணவர்களும் பட்டம் பெற்ற இந்த நிகழ்ச்சியில், பதக்கங்கள் வென்ற 197 மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பட்டத்தையும், பதக்கத்தையும் வழங்கி கௌரவித்தார். 

 

அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் கலந்துகொண்டது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்றார். தனித்துவமான மாநில கொள்கையை வடிவமைப்பதில் தமிழ்நாடு தீவிரமாக உள்ளது என பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், இந்திய அளவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் உயர்ந்துள்ளது என்றால், அதற்கு திராவிட இயக்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு போட்ட விதை தான் காரணம் என்றார். 

முதலமைச்சரை தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, வாழ்கையில் வெற்றி மட்டுமே இருக்காது, ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கல் இருக்கும், அதில் இருந்து நீங்கள் மீண்டு எழ வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

அவரை தொடர்ந்து பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சென்னை பல்கலைகழகத்தில் 6 குடியரசு தலைவர்கள், மாணவர்களாக பயின்றது என்பது இப்பல்கலைகழத்தின் பெருமைக்கு சான்று என்றார். இறுதியாக தனது உரையை முடிக்கும் முன்பு, பாரதியாரின் கவிதையை தமிழில் கூறி நிறைவு செய்தார். 

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>


  ” மருத்துவத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது;  – மு.க. ஸ்டாலின்.

” சாதனை மாரத்தான், சமூக நீதி மாரத்தானாக மாறியுள்ளது “.

திருநங்கைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியதன் மூலம் சாதனை மாரத்தான் சமூக நீதி மாரத்தான் ஆக மாறி உள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி திமுக சார்பாக சென்னை, காமராஜர் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து கலைஞர் பன்னாட்டு மாரத்தான் இன்று காலை நான்கு மணி அளவில் தொடங்கியது.

மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து தீவுத்திடல் வரை மூன்று தூரங்களில் வெவ்வேறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. அதிகாலை 5.30 மணியளவில் 21 கி.மீ, 10 கி.மீ, 5 கி.மீ என மற்ற 3 பிரிவுகளில் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து,  42 கி.மீ பிரிவில் நடைபெறும் மாரத்தான் ஓட்டத்தை நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். 

1,063 திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் உட்பட மாரத்தானில் 73 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

மாரத்தானில் பங்கேற்கும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு ஊக்கத்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. மாரத்தானில் பங்கேற்பவர்கள் அதிகாலை 3.30 மணி முதல் பகல் 12 மணி வரை மெட்ரோ தொடர் வண்டியில் இருமுறை கட்டணமில்லாமல் பயணிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

மாரத்தான் ஓட்டத்திற்கு பெறப்பட்ட முன்பதிவுக் கட்டணம் ரூ.3 கோடியே 42 லட்சம் வசூல் ராயப்பேட்டை மருத்துவமனையில் புற்றுநோய் கட்டடம் கட்டப்படுவதற்கு வழங்கப்பட உள்ளது.

மாரத்தானில் வெற்றி பெறுபவர்களுக்கு 9 பிரிவுகளில் மொத்தம் 10,70,000 ரூபாய் பரிசை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை மணிக்கு வழங்கினார்.  தமிழ்நாட்டினர் மட்டுமல்லாது வெளிநாட்டினர், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

 73,206 பேர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டதால், கின்னஸ் சாதனை வழங்கப்படுகிறது.

மேலும், லண்டனில் இருந்து வந்த கின்னஸ் குழுவினர் Longest Running race என்கிற பிரிவில், முதலமைச்சரிடம் சான்றிதழை வழங்கினர்.

 ’அபிஷேக் சேனி’  என்ற வீரருக்கு முதல்வர் முதல் பரிசு வழங்கினார் . 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதன் பின்னர் மேடையில்  பேசிய முதல்வர்:- 

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இன்று நடந்த மாராதான் சாதனை இடம் பெற்றுள்ளது.  மாரத்தான் போட்டியின் மூலமாக பதிவு தொகையாக வந்த 3 கோடியே 42,500 ரூபாய் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வழங்கப் படுகிறது.

கின்னஸ் சாதனை படைத்து, கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருகிறோம்.  செயல்படுவதில் ஒரு மாராதான் அமைச்சர் தான் மா.சுப்பிரமணியன். மா.சுப்பிரமணியன் என்றால் மாரத்தான் சுப்பிரமணியன் என அறியப்பட்டு இருக்கிறார். 

விழாக்களில் தனக்கென  ஒரு முத்திரை பதிக்க கூடியவர்;   மா.சுப்பிரமணியன் அளவிற்கு யாரும் ஓட முடியாது.  என்னால், உதயநிதியால், பொன்முடியால் கூட ஓட முடியாது.  ஆட்ட நாயகன் கேள்வி பட்டிருப்போம், இவர் ஓட்ட நாயகன்.

நான் மேயராக இருக்கும் போது, எந்த அளவிற்கு பாராட்டை பெற்றெனோ, அதே போல் மா.சு -வும் சிறப்பாக மேயராக பணியாற்றினார்.  மருத்துவத்துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

இதையும் படிக்க  | கை அகற்றப்பட்ட குழந்தை திடீரென உயிரிழப்பு…! தவறான சிகிச்சை தான் காரணமா?

 திருநங்கை பங்கேற்பாளருக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம்,  சாதனை மாரத்தான், சமூக நீதி மாரத்தானாக மாறியுள்ளது.   தம்பி உதயநிதி அமைச்சரான பிறகு விளையாட்டு துறை எழுச்சி பெற்றுள்ளது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும்”, எனத் தெரிவித்தார். 

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையின் 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது. 

சென்னை மெட்ரோ நிறுவனத்தால் ஸ்டெர்லிங் சாலையில் நடைபெற்று வரும் குடிநீர் உந்துகுழாய் இணைப்பு பணிகள் காரணமாக தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய   3 மண்டலங்களில்  ( 08.08.2023) அன்று காலை 8 மணி முதல் (09.08.2023) வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) 2ஆம் கட்ட பணிகள் சுரங்கம் தோண்டும் பணியில் சிக்கல் -  win news | latest tamil news online

இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் அளித்துள்ள செய்தி அறிக்கையில்,   சென்னை மெட்ரோ இ தொடர் வண்டிநிறுவனம் சார்பாக,  கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச்செல்லும் பிரதான குடிநீர் உந்துகுழாயை இணைக்கும் பணியானது ஸ்டெர்லிங் சாலையில் நடைபெற்று வருகிறது. 

Drinking water supply cut off due to Cauvery pipe rupture | காவிரி குழாய்  உடைப்பால் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

இதனால் 08.08.2023 அன்று காலை 6 மணி முதல் 09.08.2023  அன்று காலை 6 மணி வரை தேனாம்பேட்டை ( மண்டலம் – 9) , கோடம்பாக்கம் ( மண்டலம் -10 ) மற்றும் அடையாறு ( மண்டலம் -13 ) ஆகிய மூன்று பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

 

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
Acute water shortage in Madras: Public accusation that drinking water is  not provided properly | சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு: குடிநீர்  முறையாக வழங்கவில்லை என ...

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும், அவசரத் தேவைகளுக்கு பார வண்டிகள் மூலம் (Dial for Water ) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின்   https://cmwssb.tn.gov.in/  என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 

சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்! | Galatta

மேலும்,  குடிநீர் இணைப்பு இல்லாத மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றூம் தெரு நடைகளுக்கு பார வண்டிகள் மூலம் வழங்கப்படும் என்றும், குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதையும் படிக்க   | விழாவில் ஜெயலலிதா பெயரை சொன்ன தமிழ் ஆசிரியர்…தகாத வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி…கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்!

// stackoverflow.com/questions/123999/how-to-tell-if-a-dom-element-is-visible-in-the-current-viewport
function isElementInViewport(el) {
//special bonus for those using jQuery
if (typeof jQuery === “function” && el instanceof jQuery) {
el = el[0];
}
var rect = el.getBoundingClientRect();
return (
rect.top >= 0 &&
rect.left >= 0 &&
rect.bottom <= (window.innerHeight || document.documentElement.clientHeight) && /*or $(window).height() */
rect.right <= (window.innerWidth || document.documentElement.clientWidth) /*or $(window).width() */
);
}
// click-to-scroll behavior
$(“.anchor”).click(function(e) {
e.preventDefault();
var section = this.href;
var sectionClean = section.substring(section.indexOf(“#”));
$(“html, body”).animate({
scrollTop: $(sectionClean).offset().top
}, 1000, function() {
window.location.hash = sectionClean;
});
});
// listen for the scroll event
$(document).on(“scroll”, function() {
console.log(“onscroll event fired…”);
// check if the anchor elements are visible
$(“.anchor”).each(function(idx, el) {
if (isElementInViewport(el)) {
// update the URL hash
if (window.history.pushState) {
var urlHash = “” + $(el).attr(“id”);
window.history.pushState(null, null, urlHash);
}
}
});
});
</script>

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கை அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழுந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தங்களது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதியினர் குற்றம் சாட்டியிருந்தனர். பெற்றோரின் குற்றச்சாட்டை அடுத்து விசாரணை குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : விழாவில் ஜெயலலிதா பெயரை சொன்ன தமிழ் ஆசிரியர்…தகாத வார்த்தையால் திட்டிய திமுக நிர்வாகி…கண்டனம் தெரிவித்த ஈபிஎஸ்!

இதையடுத்து, அரசு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குழந்தையின் உடல் நிலை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி ஒன்றரை வயது குழந்தை  உயிரிழந்தது.

பெற்றோர்களின் குற்றச்சாட்டு எதிரொலியாக, அரசு சார்பில் விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என அண்மையில் அறிக்கை வெளியானது குறிப்பிடத்தக்கது.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »