Press "Enter" to skip to content

எல்லை தாண்டி வந்த இலங்கையை சேர்ந்த 8 பேர் கைது..! தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்..!

வரைவு வாக்காளர்‌ பட்டியல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக  தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் வருகிற 27ஆம் தேதி  வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியீடு உள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் என்ற அடிப்படையில், 

அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள்:- 

பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, தேசிய மக்கள் கட்சி,..

அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி:- 

திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,.. 

ஆகிய அனைத்து கட்சிகளும் நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். 

மேலும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடக்கும் காலகட்டத்தில் பொதுமக்கள் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் வருகிற நவம்பர் 4 மற்றும் 5, நவம்பர் 18 மற்றும் 19ம் தேதிகளில் வாக்காளர்களுக்கான முகாம் நடைபெற உள்ளது. 

அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5 ஆம்  தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க   |  மேயர் வீட்டின் அருகே… மனைவியின் கண்முன்னே முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »