Press "Enter" to skip to content

“பாஜகவினரை வன்முறைக்கு தள்ள வேண்டாம்” – அண்ணாமலை காட்டம்

ஆளுநர் ஆர்.என்,ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் சென்றது சட்டத்திற்கு புறம்பானது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்டம்,
மண்மங்கலம் வட்டம் நன்னியூர்புதூர் பகுதியில் உள்ள (லண்டனில் மரணமடைந்தவர்) கனகராஜ் இல்லம் சென்று குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-  

“பெரம்பலூரில் நடந்த பாஜக நிர்வாகி தாக்குதலுக்கு எதிரானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாஜக சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்.  

பாஜகவினரை வன்முறையை நோக்கி திமுகவினர் தள்ள வேண்டாம். நாங்கள் வன்முறையை விரும்பவில்லை. அப்புறம் ஏங்களுக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போயிவிடும். தற்பொழுது திமுகவினர் வன்முறைகளை கையில் எடுத்துள்ளனர்.

தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்த 13 மசோதாக்களில், 12 மசோதாக்கள் பல்கலைக்கழகங்களில் தலைவர் பதவியில் ஆளுநரின் அதிகாரத்தை நீக்கிவிட்டு, முதல்வரை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக 61 வயது உள்ள சைலேந்திரபாபு நியமிக்க வேண்டும் என்று திமுக கூறுகிறது.  வயது முதிர்வு காரணமாக அதற்கு ஆளுநர் அந்த நியமனத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சனைகள் விஷயத்தில் தட்ட வேண்டிய கதவை தட்டாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை கேட்டாலே இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும். திமுக அரசு நாடகமாடி மக்களை ஏமாற்றி வருகிறது.

செந்தில் பாலாஜி பிணை விவகாரத்தில் அரசியல் காழ்புணர்ச்சி எதுவும்இல்லை. அவர் இன்னும் அமைச்சராக நீடிப்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. அவரது சகோதரர் அசோக்குமார் 2 மாதகாலமாக தலைமறைவாக இருக்கிறார். மேலும், வருமான வரி சோதனையின்போது அதிகாரிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர்.

அதனால் பிணை வழங்க முடியாது என்று நீதிபதியின் உத்தரவிலேயே உள்ளது. பிணை கேட்டு தற்போது உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்”,  என தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது கரூர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் செந்தில்நாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிக்க   | “எங்கள் கைபேசிகள் உளவுபார்க்கப்படுகின்றன” – எதிர்கட்சிகள் புகார், மத்திய அமைச்சர் விளக்கம்

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »