Press "Enter" to skip to content

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக ஐ.டி. ரெய்டு…!

தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உட்பட 14 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய அடைமழை (கனமழை)க்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதை அடுத்து, கடந்த 2 நாட்களுக்கும் மேலாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு இன்று அடைமழை (கனமழை) பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் அதற்கான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று அடைமழை (கனமழை) பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதையும் படிக்க : வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கொட்டி தீர்த்த அடைமழை (கனமழை)… 

!

இந்நிலையில், சென்னை மற்றும் அதன்புறநகர் பகுதிகளில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர், ஆயிரம் விளக்கு, வடபழனி, மந்தைவெளி, அடையாறு, கிண்டி, வேளச்சேரி,  மற்றும் புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மகாபலிபுரத்தில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே, தொடர் மழை காரணமாக சென்னை, திண்டுக்கல், தேனி, மதுரை,  கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, சிவகங்கை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய பெய்த அடைமழை (கனமழை)யால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் வேகமாக தண்ணீர் நிரம்பி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Source: Malai Malar

More from திரையுலகம்More posts in திரையுலகம் »