Press "Enter" to skip to content

எடப்பாடியாரை அசால்ட்டாக ஓவர்டேக் செய்த செங்கோட்டையன்: ஜஸ்ட் மூணு பைசாவில் மருத்துவர்.ராமதாஸின் வாயை மூடி அதிரடி

இன்னைய தேதிக்கு அ.தி.மு.க.வின் கண்களில் விரலை விட்டு ஆட்டும் கட்சி எது? என்று கேட்டால்….’தி.மு.க.’ என்று பதில் சொன்னால் நீங்கள் அவுட். உண்மையில் இப்போதெல்லாம் ஆளுங்கட்சிக்கு ஆப்பு அடிப்பதில் முன்னிலையில் இருக்கும் கட்சி, அதே அ.தி.மு.க. கூட்டணியிலுள்ள பா.ம.க.தான். ஹட்ரோகார்பனில் துவங்கி நீட் வரையில் எல்லா விஷயங்களிலும் ஆளும் அ.தி.மு.க.வை கடுமையான விமர்சனங்களின் மூலம் வெச்சு செய்து கொண்டிருக்கிறது பா.ம.க. அது மட்டும் போதாதென்று, ’அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலின் மூலம் நிச்சயமாக பா.ம.க. ஆட்சியை பிடிக்கும்’ என்று எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வேறு போட்டுவிட்டு எடப்பாடியார் அண்ட்கோவை கதற விட்டுக் கொண்டிருக்கிறது அன்புமணி வட்டாரம். எடப்பாடியார் சூசகமாகவும், நேரடியாகவும் எவ்வளவோ சொல்லும் பா.ம.க. தரப்பு அடங்குவதாகவும் இல்லை, இணங்குவதாகவும் இல்லை.  

இந்த நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கும் உத்தரவானது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது. பா.ம.க. சார்பில் இந்த முடிவை எதிர்த்து இன்று தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர்.ராமதாஸ் அறிவித்திருந்தார். இது முதல்வர் எடப்பாடியாரை பெரிதும் அதிருப்தியாக்கியது. ஏனென்றால் கூட்டணியின் பெரிய கட்சியே இப்படி  அரசை எதிர்த்தால், அது எதிர்க்கட்சிகளின் கரத்தை இன்னும் வலிமைப்படுத்திவிடும், மக்கள் மத்தியில் அரசின் மீதான நம்பிக்கையை ஆட வைத்துவிடுமென்பதே. மேலும் அரசியல் ரீதியிலும் இது அ.தி.மு.க.வுக்கு பெரிய இடைஞ்சலை கொடுக்குமென்பதால், இந்த போராட்டத்தை கைவிட சொல்லி ராமதாஸுக்கு தூது சென்றது முதல்வர் தரப்பிலிருந்து. ஆனால் டாக்டர் கேட்கவில்லை. இந்த நிலையில் தான் அந்த அதிரடியை நிகழ்த்தினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். டாக்டர். ராமதாஸுக்கு போன் போட்ட அமைச்சர் ‘தங்களின் கோரிக்கையை பரிசீலிக்கிறோமுங்க. போராட்டத்தை கைவிடுங்களேன்!’ என்று மிக நட்பாக இரண்டு வரிகள் பேசியுள்ளார். டாக்டர், கன்வின்ஸ் ஆகிவிட்டார். விளைவு, இன்று நடக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டுவிட்டது. செங்கோட்டையனும் செம்ம ஹேப்பி. 

அரசுக்கு  எதிராக பா.ம.க.வின் போராட்டத்தால் அதிருப்தியில் இருந்த அ.தி.மு.க.வினுள் இந்த விஷயம் தீயாக பரவியது. சில அமைச்சர்களே ‘போனை போட்டு ரெண்டே வரியை பேசி, பிரச்னையை முடிச்சுட்டாரே செங்ஸ்! ஜஸ்ல் லைக் தட்டா முதல்வரையே ஓவர் டேக் பண்ணிட்டாரே!’ என்று அதிர்ந்து பேசியிருக்கின்றனர். பா.ம.க.வின் போராட்டம் ரத்தானதில் ஹேப்பியான முதல்வர், இப்படி செங்கோட்டையனுக்கு ஆதரவாக கிளம்பியிருக்கும் பேச்சை நினைத்து மீண்டும் அப்செட்டாம். 
சர்தான்!

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »