Press "Enter" to skip to content

ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது பாராளுமன்ற வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர்

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது. பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக்கூட்டம் நடக்கிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அவரது உரையில், அரசின் கொள்கைகள் மற்றும் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெறுகின்றன. 

ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து நடப்பு நிதி ஆண்டுக்கான (2019-2020) பொருளாதார ஆய்வறிக்கையை, பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார நிலை எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடியாக இந்த ஆய்வு அறிக்கை இருக்கும். 

அதன்பின்னர் 2020-2021 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாகவும் வெற்றிகரமாகவும் செயல்பட அனைத்து எம்பிக்களும் தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »