Press "Enter" to skip to content

வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க முடியவில்லை.. பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனம்

லாகூர்: கூட்டம் கூட்டமாக பறந்த வரும் வெட்டுக்கிளிகள் சில நிமிடங்களில் காடுகளில் உள்ள பயிர்களை அழித்துவிட்டு பறக்கின்றன. இந்த பிரச்சனை காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தேசிய அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் கூட்டமாக பறந்து வரும் வெட்டுக்கிளிகள்.. பாகிஸ்தானில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சில மணி நேரத்தில் மொத்தமாக கோதுமை பயிர்களை அழித்து நாசம் செய்து அதிரவைத்தன. சில வாரங்கள் இந்தியாவின் பஞ்சாப்பில் புகுந்து பயிர்களை அழித்த அவை, இப்போது பாகிஸ்தானின் பஞ்சாபில் முகாமிட்டு பயிர்களை அழித்து வருகின்றன.

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்திருக்கின்றன. லட்சக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருவதால், பாகிஸ்தானில் தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “பஞ்சாப் மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளில் காணாத எண்ணிக்கையில் வெட்டுகிளிகள் பெருகி உள்ளன. இவை பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதுதொடா்பாக, பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான கூட்டம் இஸ்லாமாபாதில் வெள்ளிக்கிழமை நடந்தது.

அப்போது, வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.. மேலும், வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றும் பணிகளுக்காக ரூ.730 கோடி ஒதுக்கீடு செய்ய பிரதமர் தலையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »