Press "Enter" to skip to content

கோர தாண்டவமாடும் கொடூர கொரோனா..! ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..!

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 1,357 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 242 பேர் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனையும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என கண்டறியப்பட்டு இதுவரையில் தீவிர கண்காணிப்பில் 16,067 பேர் வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 45,207 அந்நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. 

சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவுவதை தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முன் 2003 ல் சார்ஸ் வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அதை விட கொடூரமான முகத்தை கொரோனா வைரஸ் காட்டி வருவதால் சீனா மட்டுமின்றி உலகநாடுகள் அனைத்தும் அச்சத்தில் இருக்கின்றன.

‘வெறுப்பு அரசியலுக்கு டெல்லி கொடுத்த தண்டனை’..! பாஜகவை தாறுமாறாக விமர்சித்த ஜவாஹிருல்லா..!

Source: AsianetTamil

More from செய்திகள்More posts in செய்திகள் »