Press "Enter" to skip to content

மிகப்பெரிய பைத்தியகாரத்தனம் சரக்கு, சேவை வரி: சுப்பிரமணியசாமி

முதலீட்டாளர்களை வருமான வரியின் பெயராலும், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனமான சரக்கு, சேவை வரியின் பெயராலும் பயமுறுத்த வேண்டாம் என்று பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

ஐதராபாத் :

ஐதராபாத்தில் பிரக்னாபாரதி சிந்தனையாளர் பேரவை என்ற அமைப்பு ‘ இந்தியா, 2030-க்குள் ஒரு பொருளாதார வல்லரசு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற மாநிங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பாரதீய ஜனதா கட்சி அரசு கொண்டுவந்துள்ள சரக்கு, சேவை வரியை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதற்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

நாடு அவ்வப்போது 8 சதவீத பொருளாதார வளர்ச்சி கண்டிருந்தாலும்கூட, அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களில் எந்த முன் னேற்றமும் காணப்படவில்லை. முதலீட்டாளர்களை வருமான வரியின் பெயராலும், 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பைத்தியக்காரத்தனமான சரக்கு, சேவை வரியின் பெயராலும் பயமுறுத்த வேண்டாம். சரக்கு, சேவை வரி மிகவும் சிக்கலானது. எந்த படிவத்தை நிரப்ப வேண்டும் என்று யாருக்கும் தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »