Press "Enter" to skip to content

அமெரிக்காவில் விண்ணில் பறக்க முயன்ற விமானி தவறி விழுந்து பலி

அமெரிக்காவில் நீராவி ராக்கெட் மூலம் விண்ணில் பறக்க முயன்ற விமானி மைக், பல நூறு அடி உயரத்தில் இருந்து தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நியூயார்க்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் மைக் ஹியூஸ் (வயது 64). விமானியான இவர் பூமி தட்டையானது என்றும், அதனை நிரூபிப்பேன் என்றும் கூறி வந்தார். மேலும் அவர் விண்வெளிக்கு செல்வதற்காக முற்றிலும் நீராவியால் இயங்கும் ராக்கெட்டை வீட்டிலேயே தயாரித்து, அதனை தொடர்ந்து சோதித்து வந்தார். மைக், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது ராக்கெட் மூலம் தரையில் இருந்து 1,870 அடி உயரத்துக்கு பறந்து பாராசூட் மூலம் தரையிறங்கினார்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை மீண்டும் தனது நீராவி ராக்கெட் மூலம் விண்ணில் பறக்க மைக் முயன்றார். இம்முறை 5,000 அடி உயரத்தை அடைய வேண்டும் என்பதை அவர் இலக்காக கொண்டிருந்தார்.திட்டமிட்டபடி அவரது நீராவி ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது. ஆனால் ராக்கெட் சென்ற வேகத்தில் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பாராசூட் தனியே பிய்த்துக்கொண்டு சென்று விட்டது. இதனால் பல நூறு அடி உயரத்தில் இருந்து ராக்கெட் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் மைக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »